இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மற்றும் கான்சுலேட் டிசம்பர் 24, 2025 புதன்கிழமை முதல் டிசம்பர் 26, 2025 வெள்ளிக்கிழமை வரை மூடப்படும். ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் விசா ரினிவல் செய்ய முடியாமல் நேர்முக தேர்வு காலம் தாழ்த்தப்பட்டு இருக்கும் வேளையில் இந்த விடுமுறை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உத்தரவின்படி அனைத்து அமெரிக்க அலுவலங்கள் மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 3 நாள் விடுமுறை காலத்தில் தூதரகம் மற்றும் கான்சுலேட் சேவைகளை மக்கள் பெற முடியாது. விசா நேர்முகத் தேர்வு, ஆவண சமர்ப்பிப்பு போன்ற பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. தூதரகம் மற்றும் கான்சுலேட் சேவைகள் டிசம்பர் 26 முதல் தொடங்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிறிஸ்துமஸ் ஈவ் (டிசம்பர் 24) மற்றும் கிறிஸ்துமஸ் பிறகு நாள் (டிசம்பர் 26) ஆகியவற்றை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்று உத்தரவிட்டார். இதன்படி அரசு துறைகள், நிறுவனங்கள் மூடப்படும். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஏற்கனவே அரசு விடுமுறை என்பதால் இப்புதிய உத்தரவில் டிசம்பர் 25 சேர்க்கப்படாமல் 24 மற்றும் 26ஆம் தேதி மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் கணக்கில் இந்த விடுமுறை விபரத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 24 முதல் 26 வரை தூதரகம், கான்சுலேட்கள் மூடப்படும் என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து 27,28 ஆகிய தேதிகள் வார இறுதி நாள் என்பதால் மொத்தம் 5 நாட்கள் தூதரகம் மற்றும் கான்சுலேட்கள் மூடப்படும். இக்காலத்தில் விசா, பாஸ்போர்ட் சேவைகள் நிறுத்தப்படும். அவசர சேவைகள் மட்டும் தனி ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கலாம்.
விசா நேர்முகத் தேர்வு, ஆவண சமர்ப்பிப்புக்கு திட்டமிட்டவர்கள் இந்த விடுமுறையை கவனத்தில் கொள்ள வேண்டும். டிசம்பர் 29 முதல் சேவைகள் தொடங்கும். முன்கூட்டியே ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் புக் செய்யலாம். அவசர தேவைக்கு தூதரக இணையதளத்தை சரிபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications