சிக்கியது அமெரிக்கா.. நொறுங்கியது ரஷ்யா.. டிரம்புக்கு புதிய சிக்கல்..!!

அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிப்போய் நிற்கும் வேளையில் அடுத்தாக முக்கியமான பிரச்சனை வெடித்துள்ளது. ஆட்சியில் மாற்றம், பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி, பெரும் நம்பிக்கையாக இருந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பாதையில் ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பெரும் முட்டுக்கட்டை போடப்படும் காரணத்தால் மொத்த டெக் துறையும் சரிந்துள்ளது, இதனால் அமெரிக்கா நிதித்துறை பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.

அமெரிக்காவைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகளை வெடித்து வரும் வேளையில் அந்நாட்டை முடங்கச் செய்யும் வகையிலான ஒரு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சிக்கியது அமெரிக்கா.. நொறுங்கியது ரஷ்யா.. டிரம்புக்கு புதிய சிக்கல்..!!

அமெரிக்காவில் கடந்த வார முடிவில் டீசல் இருப்பின் அளவு 36 லட்சம் பேரல்கள் குறைந்து, 9.93 கோடி பேரல்களாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவிற்குள் சரக்கு போக்குவரத்திற்கு மிகவும் அடிப்படையாக இருக்கும் டீசல் எரிபொருள் இருப்பு குறைவது மட்டும் அல்லாமல் விலையும் தொடர்ந்து உயர்வுடனே உள்ளது.

மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், ஈரான் நடத்தும் தாக்குதல் காரணமாக மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய டீசல் இருப்பு அளவு என்பது 2003ஆம் ஆண்டு மே மாதத்திற்கு இணையான அளவீட்டை பதிவு செய்துள்ளது பெரும் அச்சத்தை அந்நாட்டு மக்களுக்குப் உருவாக்கியுள்ளது.

Also Read

மேலும் அமெரிக்காவுக்கு டீசல் சப்ளை செய்ய உத்தரவாதம் கொடுத்த ரஷ்யா, உக்ரைனின் தொடர் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல் காரணமாக சப்ளை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் டீசல் இருப்பு இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து எரிபொருட்களின் இருப்பு 3.37 கோடி பேரல்கள் குறைந்து, 25 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது எரிபொருள் செலவு செய்யப்படும் அளவுக்கு டீசலை வாங்கி சேமிக்க முடியவில்லை. பழைய நிலைக்குச் செல்ல வேண்டுமாயின் பல பில்லியன் டாலர் இதற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதோடு அமெரிக்க அரசின் அவசரக்கால கச்சா எண்ணெய் சேமிப்பு அளவு கடந்த வாரம் மட்டும் 3.99 லட்சம் பேரல்கள் குறைந்து 28.22 கோடி பேரலாகக் குறைந்துள்ளது. இது 1982ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பதிவான குறைவான அளவீடாகும்.

மொத்தமாகப் பார்த்தால், அமெரிக்காவின் டீசல், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு மிக வேகமாகக் குறைந்து வருகிறது, இது அமெரிக்காவின் இயக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக அமைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+