அமெரிக்கா பொருளாதாரம் மிகப்பெரிய மந்தநிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று சமீபகாலமாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகள் உலகளாவிய வர்த்தகத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாலும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவுடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதாலும், அமெரிக்காவில் ஏற்படக் கூடிய மந்தநிலை, குறைந்தபட்சம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தையும் குறைக்கக்கூடும்.
முதல்ல மந்தநிலை என்றால் என்னவென்று தெரிந்தால் மட்டுமே அதன் விளைவுகளைத் தெரிந்து கொள்ள முடியும். தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகம் மந்தநிலை என்றால் என்ன என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, 2 காலாண்டுகளாக ஒரு நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக அதாவது மைனஸ்-ல் இருந்தால் ரெசிஷன் ஆகும். இது பொருளாதார சரிவின் ஆழம், பரவல் மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மந்தநிலை என்பது குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தில் ஏற்படும் இழப்பு , வளர்ச்சி வெறுமனே நின்று விடுகிறது அல்லது குறுகிய காலத்தில் சுருங்குகிறது. தீவிரமான மந்தநிலை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அல்லது 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வீழ்ச்சியைக் குறிக்கும்.
கடந்த 7ம் தேதி ராய்ட்டர்ஸ் பொருளாதார நிபுணர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், அடுத்த 12 மாதங்களில் மந்தநிலைக்கான சாத்தியம் 45 சதவீதமாக உள்ளது. இது 2023 டிசம்பர் பிறகு அதிகபட்சமாகும். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை, 2025 மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பில் ஏற்கனவே 0.8 சதவீத புள்ளியைக் குறைத்து விட்டது. வணிக உணர்வு மற்றும் மூலதன செலவின திட்டங்கள் வீழ்ச்சி கண்டு வருவதே இதற்குக் காரணம்.
கடந்த மாதம் பாட்காஸ்டில் மூடிஸ் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் மார்க் சாண்டி பேசுகையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் மந்தநிலை வாய்ப்புகள் 40 சதவீதமாக இருக்கும். வரிகள், குறைந்து வரும் நிதி உந்துதல் மற்றும் இறுக்கமான கடன் தரநிலைகளை இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
2000ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா சந்தித்த மந்தநிலைகள்: டாட் காம் மந்தநிலை என்பது 2000-01ல் ஏற்பட்ட ஒரு பொருளாதார மந்தநிலையாகும். இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெருமளவு உயர்ந்து பின்னர் அவை வீழ்ச்சியடைய தொடங்கிய போது ஏற்பட்டது. 2001 மார்ச் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்கள் இது இருந்தது. ரியல் ஜிடிபி மைனஸ் 0.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. வேலையின்மை விகிதம் 5.7ச சதவீதமாக இருந்தது.
கிரேட் மந்தநிலை: அமெரிக்காவில் வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அடமான ஆதரவு பத்திரங்களின் சரிவு மூலம் தூண்டப்பட்ட மந்தநிலையில். 2007 டிசம்பரில் தொடங்கி 2009 ஜூன் வரையிலான 18 மாதங்கள் இந்த மந்தநிலை நிலவியது. ரியல் ஜிடிபி மைனஸ் 4 சதவீதமாக வீழ்ச்சியைச் சந்தித்தது.
கோவிட்-19 மந்தநிலை: 2020 பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரலில் முடிவடைந்தது. மாதங்கள் மட்டுமே இந்த மந்தநிலை இருந்தது. இருப்பினும் அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மைனஸ் 19.2 சதவீதமாகச் சரிவு கண்டது. அந்த கால கட்டத்தில் வேலையின்மை விகிதம் 14.7 சதவீதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications