அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve தனது இரண்டு நாள் நாணய கொள்கை முடிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகித குறைப்பை அறிவித்தது. நேற்று இரவு வெளியான பெட் முடிவில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 3.50-3.75 சதவீதமாக மாற்றப்பட்டு உள்ளது.
இது சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தாலும், பெடரல் ரிசர்வ்-ன் கொள்கையில் இன்னும் தெளிவாக இல்லை என்பதே முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டி ஒன்றாக உள்ளது. இந்த முடிவுகள் தங்கம், வெள்ளி விலையை மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையையும் அதிகமாக பாதிக்கும்.

இந்த முடிவு இந்திய பங்குச் சந்தைக்கு இரு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். டாலர் ஆதிக்கம் குறையும் மற்றும் உலகளாவிய லாபம் அளவுகள் குறைவதால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இது இரண்டும் இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமான விஷயமாக உள்ளது.
இதோடு VT மார்க்கெட்ஸ் குளோபல் ஸ்ட்ராடஜி ஆப்ரேஷன்ஸ் பிரிவு உயர் அதிகாரியான ராஸ் மேக்ஸ்வெல் கூறுகையில், அமெரிக்க வளர்ச்சி அச்சம் மற்றும் ஃபெட் வட்டி குறைப்புக்கான எண்ணிக்கை வரம்பும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைக்கலாம் என்று எச்சரிக்கிறார். இதேவேளையில் வளரும் சந்தைகள் டாலர் மதிப்பு சரிவால் பலனடையும். இதோடு இந்திய ரூபாய் மதிப்பு உயர துவங்கும்.
இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்த ஆண்டு 17 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.4 லட்சம் கோடி) வெளியேற்றியுள்ளனர். இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் நிச்சயமின்மை, டாலர் தேவை அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பை கடுமையாக பாதித்துள்ளன. ஆனால் தற்போதைய ஃபெட் வட்டி விகித குறைப்பு டாலர் ஆதிக்கத்தை மென்மையாக்கி இந்திய சந்தையில் FPI முதலீட்டை அதிகரிக்கலாம்.
இதனால் இந்திய பங்குச்சந்தைக்கு இது பொன்னான காலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிவைக்கும் பங்குகளை டார்கெட் செய்து வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பெடரல் ரிசர்வ் 2024 செப்டம்பரில் தொடங்கிய நேற்றைய கூட்டம் வரையில் மொத்தம் 1.75 சதவீதம் அளவிலான வட்டி குறைப்பை அறிவித்துள்ளது. இந்த முடிவு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும், குறிப்பாக இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் ரூபாய் மதிப்பின் மீது நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும்.
நேற்றைய பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வெளியான அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு என்னவென்றால் பெடரல் ரிசர்வ் 2026இல் ஒரே ஒரு முறை மட்டுமே வட்டியை குறைக்கும் என எதிர்பார்ப்பாத சிக்னல் கொடுத்துள்ளது. ஆனால் CME ஃபெட்வாட்ச் கருவியின்படி, 2026ல் இரண்டு முறை வட்டி குறைப்புக்கு 77 சதவீத வாய்ப்பை இருப்பதாக கூறுகிறது.
இந்த வேறுபாடு, பெடரல் ரிசர்வ்-ன் கொள்கையில் நிச்சயமின்மையை காட்டுகிறது. இதேவேளையில் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் மோசமடைந்தால் மட்டுமே கூடுதல் வட்டி குறைப்புக்கு வாய்ப்புகள் உள்ளது என்று ஃபெட் நேரடியாக தெரிவித்துள்ளது. இது உலகளாவிய முதலீட்டாளர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் அமெரிக்க வளர்ச்சியில் தேக்கம் வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்மையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் முடிவுகள் இந்தியாவுக்கு கலவையான தாக்கத்தை தரும். பெட் கொள்கையில் ஹாக்கிஷ் நிலை வந்தால் இந்திய சந்தையில் இருந்து மீண்டும் FPI முதலீடுகளின் வெளியேற்றம் அதிகரிக்கலாம், பங்குகள் சரியலாம். மென்மையான கொள்கை வந்தால் ரூபாய் ஸ்திரமடையலாம், பங்குகள் ஏறலாம்.
சந்தை நிபுணர்கள், நீண்டகால முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். பெடரல் ரிசர்வ் கூறிய முக்கியமான விஷயம் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மோசமடையாவிட்டால் வட்டி குறைப்புகள் நிறுத்தப்படலாம் என்று கூறியுள்ளது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications