அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை மீண்டும் தளர்த்தியுள்ளது. இன்று வெளியான முடிவுகளின் படி, பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக குறைக்கப்பட்ட வட்டி விகிதமாகும். இதன் மூலம், வட்டி வரம்பு 4.25% முதல் 4.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தலைமையிலான FOMC இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு சந்தை கணிப்புகளுக்கு இணையாக ஒத்துப்போகும் நிலையில், அடுத்த வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் பணவீக்க அழுத்தங்கள் இருக்கும் காரணத்தால் இதை கட்டுக்குள் வைக்க 2025 ஆம் ஆண்டில் இரண்டு முறை மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதத்தில், பெடரல் ரிசர்வ் 50 அடிப்படை புள்ளிகள் என்கிற அதிரடியான வட்டி குறைப்பை அறிவித்தது, அப்போது அமெரிக்காவில் குறைந்து வரும் பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய பொருளாதார தரவுகள், குறிப்பாக தொடர்ந்து நிலவும் அதிக பணவீக்கம், மிகவும் கவனமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாடு உடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை எதிர்த்து போராட நான்கு தசாப்தங்களுக்கு பிறகு செப்டம்பர் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. வட்டி விகிதங்களை குறைப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், கடன் வாங்கல் மற்றும் செலவினங்களை ஊக்குவிக்கவும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மீட்க முடியும் என பெடரல் ரிசர்வ் நம்புகிறது.
இந்த வட்டி விகித குறைப்பு இந்திய முதலீட்டு சந்தை மட்டும் அல்லாமல் தங்கம், பிட்காயின் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications