உலகம் நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.
இதனால் உலகம் முழுவதும் விரைவில் ரெசிஷன் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்த ரெசிஷனில் அதிகம் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நவம்பர் 3ஆம் தேதி ஆர்பிஐ தனது கூடுதல் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த நிலையில் இன்று அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் அதன் வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணய கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூடுதல் கூட்டம் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் கூட்டம் மூலம் முக்கியமான முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 82 ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், உணவு பணவீக்கம், நாட்டு மக்களின் நுகர்வின் அளவுகள் அனைத்தும் மோசமான நிலையிலேயே உள்ளது. ஏற்கனவே ஆர்பிஐ ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைச் சரி செய்ய 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகத் தொகையைச் செலவு செய்துள்ளது.
அமெரிக்கா
இந்த நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பெடரல் ரிசர்வ் முடிவு
செப்டம்பர் கூட்டத்தில் முடிவில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் 2022 முடிவிற்குள் 1.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்திப் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 4.25 - 4.50 சதவீதமாக நிலை நிறுத்த திட்டமிட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் குறைவான வட்டி விகிதத்தை எதிர்பார்க்கின்றனர்.
நவம்பர் 3 ஆம் தேதி கூட்டம்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்கவே ஆர்பிஐ சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆர்பிஐ மே மாத திடீர் கூட்டத்தைப் போல் நவம்பர் 3 ஆம் தேதி நாணய கொள்கைக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் செப்டம்பர் 28 - 30, 2022 அன்று கடைசியாகக் கூடியது, இதைத் தொடர்ந்து ஆர்பிஐ அட்டவணைப் படி டிசம்பர் 5 - 7, 2022 அன்று தான் நடக்க வேண்டும். தற்போது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வின் முடிவு வருவதால் நவம்பர் 3 ஆம் தேதி திடீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய முடிவுகள்
இந்த நிலையில் இக்கூட்டத்தில் ஆர்பிஐ கட்டாயம் அதிகரித்து வரும் ரீடைல் பணவீக்கத்தையும், தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்படும் பாதிப்பை காப்பாற்றக் கட்டாயம் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் கூட்ட முடிவுகள்
செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.90 சதவீதமாக அறிவித்தார். இதேபோல் SDF விகிதம் 5.65 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.15 சதவீதமாக உயர்த்தி ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications