சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் உச்சத்தில் உள்ள நிலையில், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில் எதிர்பார்த்ததைபோலவே அமெரிக்காவின் மத்திய வங்கியானது மீண்டும் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 21 அன்றும் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்திருந்தது.
பணவீக்க இலக்கு
அமெரிக்காவின் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 8.2% ஆக அதிகரித்திருந்தது. இது மத்திய வங்கியில் இலக்கினை விட 4 மடங்கு அதிகமாகும். தொடர்ந்து பணவீக்கத்தினை 2% கீழாக கொண்டு வரும் வரையில் மத்திய வங்கி தனது கடுமையான நடவடிக்கையினை தொடரும் என்றும் கூறியிருந்தது.
வளர்ச்சி மேன்மையடையும்
ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி, சமீபத்திய மாதங்களில் வேலையின்மை விகிதம் குறைந்து, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் வளர்ச்சி விகிதமானது சற்றே மேன்மையடைய தொடங்கியுள்ளது. செலவினங்களும் சற்று அதிகரித்துள்ளது. இது வளர்ச்சிக்கான அறிகுறியாக இருந்தாலும், 4வது முறையாகவும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
வளர்ச்சியில் தாக்கம்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான ராணுவ நடவடிக்கையானது, பொருளாதாரத்தில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது உலக பொருளாதார நடவடிக்கையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முதலீடுகள் வெளியேறலாம்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை எதிர்பார்த்ததை போல 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இது அமெரிக்க பங்கு சந்தையினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்கம் குறையலாம்
டிசம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையானது மெதுவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்துவது குறையலாம். இது சந்தையில் ஏற்ற இறக்கத்தினை குறைக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய சந்தை
இதன் காரணமாக இந்திய சந்தையில் தாக்கம் குறையலாம் என்ற நிலையில், இந்திய சந்தையில் ஏற்றம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், சர்வதேச பங்கு சந்தைகள், விழாக்கால பருவத்தில் காணப்பட்ட வலுவான தேவை என பலவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் முடிவென்ன?
பல நிபுணர்களும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடும் 2022ன் இறுதிக்குள், ரெசசனை எட்டலாம் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில் இன்று நடக்கவிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications