அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று முடிவுகளை வெளியிட உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் கண்காணிக்கின்றனர் - வட்டி விகிதங்களை குறைப்பார்களா? எவ்வளவு குறைப்பார்கள்?
இது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருக்கும் ஆனால் இந்த ஒரு முடிவு, இந்திய பங்குச் சந்தையை ரூ.10 லட்சம் கோடி அளவிலான ஒரு புயலை அடிக்க வழிவகுக்கும் என்றால் மிகையில்ல. இதோடு நிற்காமல் இந்த வட்டி விகித குறைப்பு உங்க வீட்டுக்கடன், வாகன கடனுக்கான ஈஎம்ஐ குறையும் என்றால் நம்ப முடிகிறதா..? அமெரிக்காவில் அடித்தால் இந்தியாவில் எதிரொலிக்கும். எப்படி..?

வட்டி குறைப்பு:
அமெரிக்க மத்திய வங்கிகள் மட்டும் அல்லாமல் உலகில் எந்தொரு நாட்டின் மத்திய வங்கியும் வட்டி குறைப்பது மூலம், அந்நாட்டிலும், அந்நாட்டின் நாணயத்தை பயன்படுத்தும் பிறநாட்டிலும் பணம் (குறைந்த வட்டியில் கடன்) எளிதாக கிடைக்க செய்யும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த வட்டி குறைப்பு மூலம் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைந்து, கடன்களை மலிவாக்கி, நுகர்வோரின் செலவு செய்யும் அளவீட்டை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பலன்:
இத்தகைய வட்டி குறைப்பின் மூலம் வீட்டுக் கடன்கள் மட்டுமல்ல, பங்குகள், சம்பளம், தங்கம், ரூபாய் மதிப்பு, கடன் தவணைகள் மற்றும் ஏற்றுமதிகள் போன்ற அனைத்திலும் செயின் ரியாக்ஷனாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் பவர்:
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் உலகளாவிய பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் பவரை கொண்டு இருக்கும் காரணத்தால், அதன் முடிவுகள் உலக சந்தைகளை அசைத்து பார்க்கும் வல்லமை கொண்டது.
தற்போது பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைத்தால், அமெரிக்க பத்திர சந்தையில் இருக்கும் டாலர் முதலீடுகள் அமெரிக்காவை விட்டு வெளியேற செய்யும், அப்படி வெளியேறும் பணம் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் முதலீடாக மாறும். இதன் விளைவாக, நிப்டி குறியீடு உயரும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) முதலீடு செய்வார்கள். இது அனைத்தும் உங்கள் முதலீட்டு போர்ட்போலியோவிலும் எதிரொலிக்கும்.
பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் எதிர்பார்ப்புகள்
இந்தக் கூட்டத்தில், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்காமல் இருக்கலாம், 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைக்கலாம் அல்லது 50 bps பெரிய அளவில் குறைக்கலாம்.
இந்த மூன்றும் தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது, ஒருப்பக்கம் டொனால்டு டிரம்ப் பெடரல் ரிசர்வ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்யும் காரணத்தால் வட்டி விகித குறைப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்றால் பங்குச்சந்தை தடுமாறும், 0.25 சதவீதம் வட்டியை குறைத்தால் பணவீக்கம் குறித்த அச்சம் அதிகரிக்கும், இதுவே 0.50 சதவீகம் வரையிலான வட்டி குறைப்பை அறிவித்தால் ரெசிஷன் குறித்த அச்சம் அதிகரிக்கும்.
இதனால் ஜெரோம் பவலின் பேச்சு உலக வர்த்தக சந்தையை தீர்மானிக்கும் விஷயமாக உள்ளது. பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்தால் அடுத்து பிரிட்டன், ஜப்பான், கனடா, ஐரோப்பா போன்ற பிற மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைக்கும். இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கம்
பெடரல் ரிசர்வின் வட்டி குறைப்பு எப்படியெல்லாம் இந்தியாவை பாதிக்கும்..? 25 bps குறைப்பு டாலரை பலவீனப்படுத்தி, ரூபாயை வலுப்படுத்தும். இதன் விளைவாக, தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் ஏற்றுமதி துறைகள் உயரும், தங்கம் விலை உயரும், இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறிய FII திரும்ப வரும்.
ஆனால், 50 bps பெரிய குறைப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். குறுகிய காலத்தில் சந்தை அதிரடியாக உயர்ந்தாலும், ஆனால் நீண்ட காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் முதலீட்டு சந்தையில் உருவாகும்.
2008 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி குறைப்புகளுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் 18 மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டில் இருந்து இந்திய சந்தைக்கு வரும் முதலீடுகள் தான்.
இப்போ புரிகிறதா எப்படி அமெரிக்காவில் அடித்தால் இந்தியாவில் எதிரொலிக்கும் என்று. மேலும் பெடரல் ரிசர்வ்-ன் முடிவுகள், அதன் மூலம் ஏற்படும் தாக்கம் என அனைத்து செய்திகளையும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் காணலாம்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications