அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த வட்டி விகிதத்தை குறைப்பை அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக இரண்டு வட்டி குறைப்புகள் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை நாளுக்கு நாள் மோசமாகி வரும் வேளையிலும், பணவீக்கம் இன்னும் தொடர்ந்து பெடரல் வங்கியின் இலக்கிற்கு மேல் இருக்கும் காரணத்தாலும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) 11-க்கு-1 என்ற வாக்கெடுப்பில், வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது, இதன் மூலம் தற்போதைய வட்டி விகிதம் 4.00%-4.25% வரம்பில் நிர்ணயித்ததுள்ளது. ஆனால் வால் ஸ்ட்ரீட் எதிர்பார்க்கப்பட்ட 0.50 சதவீத அளவை விட குறைவானது.
இதன் எதிரொலியாக கோல்டு ஸ்பாட் மார்கெட்ல் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3700 டாலர் அளவீட்டை தொட்டாலும், அடுத்த சில நிமிடத்தில் சரிய துவங்கியது. தற்போது 3,666 டாலரில் வர்த்கமாகி வருகிறது. இதேபோல் கிஃப்டி நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 25,493.00 புள்ளிகளை அடைந்துள்ளது.
FOME கமிட்டியில் புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ஸ்டீபன் மிரான் மட்டும் இந்த 25 bps குறைப்புக்கு எதிராக வாக்களித்து, 50 bps குறைப்பை ஆதரித்தார். இதேவேளையில் டிரம்ப் கொடுத்த நெருக்கடியை கண்டுக்கொள்ளாமல் அமெரிக்க சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் என்ன தேவையோ அதை செய்துள்ளதாக கருத்து நிலவுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 22,000-ஆக குறைந்தது, ஜூலை மாதத்தின் 79,000-இலிருந்து பெரும் சரிவாகும். இதன் மூலம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக உயர்ந்தது.
இதோடு அமெரிக்க நுகர்வோர் விலை இன்டெக்ஸ் (CPI) பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.9 சதவீதமாக உயர்ந்து, ஜூலையின் 2.7 சதவீதத்தை விட அதிகமாகியுள்ளது. அமெரிக்க பணவீக்கம் பெடரல் ரிசர்வ் இலக்கான 2 சதவீதத்தை விட அதிகமாக உள்ளதால் இந்த வட்டி விகித குறைப்பு நடந்துள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் அதிகரித்துள்ள பலவீனங்கள் மற்றும் பணவீக்கம் உயர்வை இந்த வட்டி விகித குறைப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு வட்டி குறைப்புகள் இருக்கும் என பெடரல் ரிசர்வ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications