முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், அமெரிக்காவின் கேகேஆர் நிறுவனம் 5,550 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர், ரிலையன்ஸின் சில்லறை நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும், இதற்காக 5,550 கோடி ரூபாய் முதலீடும் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அதன் டிஜிட்டல் வணிகத்தினை விரிவுபடுத்துவதற்காக, பல ஆயிரம் கோடி நிதியினை திரட்டிய ரிலையன்ஸ், தற்போது சில்லறை வர்த்தகத் துறையிலும் களமிறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் இரண்டாவது முதலீடு
இந்த அறிவிப்பானது ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சில்வர் லேக் நிறுவனம் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் கேகேஆர் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்த மாதத்திலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின். சில்லறை வர்த்தக பிரிவில் வந்துள்ள இரண்டாவது முதலீடாகும்.
கேகேஆரின் இரண்டாவது முதலீடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கே.கே.ஆரின் இரண்டாவது மிகப்பெரிய முதலீடாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவை தளமான ஜியோ பிளாட்ஃபார்மில் 11,367 கோடி ரூபாயினை முதலீடு செய்யப்போவதாக, கடந்த மே மாதம் கே.கே.ஆர் நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம்
ரிலையன்ஸ் சில்லறை நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும், லாபகரமான சில்லறை வணிகத்தை இயக்குகிறது. அதன் கிளைகள் 7,000-க்கும் மேற்பட்ட நகரங்களில், 12,000 மேற்பட்ட கடைகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் அதன் சில்லறை வர்த்தகத்தினை இன்னும் மேம்படுத்துவதற்கு, உலகளாவிய முதலீட்டாளர்களை ரிலையன்ஸ் ஈர்க்க தொடங்கியுள்ளது.
மொத்தம் எவ்வளவு நிதி திரட்ட போகிறது?
மேலும் பிசினஸ் டுடே அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ரீடெயில் வர்த்தகத்தின் 15- 20% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 80,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட ரிலையன்ஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு சுமார் 10 வெளி நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் அதன் மதிப்பு 4.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் தெரிவித்துள்ளது.
மிக்க மகிழ்ச்சி
கே.கே.ஆரின் இணை நிறுவனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹென்றி கிராவிஸ் இது குறித்து கூறுகையில், ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் புதிய வர்த்தக தளம், நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான தேவையை பூர்த்தி செய்து வருகிறது, இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனையாளராக மாறுவதற்கான, உந்துதல் கொண்ட ரிலையன்ஸ் சில்லறை விற்பனையை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்திய சில்லறை பொருளாதாரத்தை உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் பங்கு விலை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சியானது நிச்சயம் நல்ல லாபத்தினை கொடுக்கும். பொதுவாக எந்த வர்த்தகத்தினை முகேஷ் அம்பானி தொடங்கினாலும், விரிவு படுத்தினாலும் மாபெரும் வெற்றியினை பெறுவார் என்பது முதலீட்டாளார்களின் நம்பிக்கை. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் பங்கில் தங்களது முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதற்கிடையில் இன்ரு இதன் பங்கு விலை 38 ரூபாய் அதிகரித்து, 2249 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ் தான்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications