அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணி செய்தவர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பதற்கான தகுதியாக நிர்ணயம் செய்திருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
ரெடிட் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தான் விண்ணப்பம் செய்த நிறுவனத்தைச் சேர்ந்த மனித வளத்துறை அதிகாரி தவறுதலாக அவர்களின் ஊழியர்கள் தேர்வு நடைமுறைக்கான நிபந்தனைகளை தன்னுடன் பகிர்ந்து விட்டதாகவும் கூறி அவர் அந்த நிபந்தனைகளை ரெடிட் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் எந்தெந்த தகுதி இருந்தால் அவர்களை வேலைக்கு தேர்வு செய்யலாம் என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அவருடைய இந்த ரெடிட் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் எம்ஐடி, ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாட்டர் லூப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பிரிவில் 4 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும், குறிப்பாக மாடர்ன் ஜாவா ஸ்கிரிப்ட்டில் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் லாங்குவேஜ் மாடல்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அது மட்டும் இன்றி விசா ஸ்பான்சர் அடிப்படையில் யாரையும் வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்து வேலைவாய்ப்பு வழங்க முடியாது என கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த வேலை வாய்ப்பு என்பது தெளிவாகியுள்ளது.
இது தவிர இன்டெல், ஹெச்பி, டிசிஎஸ், டாடா, மகேந்திரா, இன்போசிஸ், கேப் ஜெமினி, டெல், காக்னிசன்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்பு வழங்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது பலரும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் ஆட்கள் தேர்வு நடைமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரிய பெரிய கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு எனக் கூறுவது எப்படி நியாயமாகும் என ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications