ஊழியையுடன் உல்லாசம்.. டேட்டிங்.. மெக்டொனால்ட்ஸ் சிஇஓ ஸ்டீவ் பதவி காலி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: உலகப் புகழ் பெற்ற மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலவைரும் அதன் தலைமை செயலதிகாரியுமான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கின் வேலை போய் விட்டது. காரணம், அவரது நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியையுடன் அவர் டேட்டிங் போனதுதான்.

 

இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மெக்டொனால்ட்ஸ், ஸ்டீவின் வேலையைக் காலி செய்து விட்டது.

மேலும் ஸ்டீவின் செயலானது, நிறுவனத்தின் விதிமுறைக்கும், கொள்கைக்கும் புறம்பானது என்றும், இது ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காதல் உறவு

காதல் உறவு

இதற்கிடையே, தனக்கும் தனது ஊழியைக்கும் இடையிலான உறவை பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார் ஸ்டீவ். இதுதொடர்பாக அவர் தனது நிறுவன ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளார். அதில் தான் செய்தது தவறுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் எனது தவறை மறைக்க விரும்பவில்லை. இதனால் நிறுவனத்தின் இந்த முடிவை நான் மனதார ஏற்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கும் கட்டம் வந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்டீவின் வரலாறு

ஸ்டீவின் வரலாறு

ஸ்டீவுக்கு 52 வயதாகிறது. விவாகரத்து ஆனவர். முதலில் 1993ம் ஆண்டு லண்டனில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளராக இருந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து பல பொறுப்புகளை வகித்தார். இந்த நிலையில் மீண்டும் பின்னர் 2011ல் இதிலிருந்து விலகி பீஸா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பிறகு ஆசியாவில் புகழ் பெற்ற வாகம்மா நிறுவனத்தில் இணைந்தார்.

அவரின் அதிரடியான நடவடிக்கையால் புகழப்பட்டவர்
 

அவரின் அதிரடியான நடவடிக்கையால் புகழப்பட்டவர்

இந்த நிலையில் தான் கடந்த் 2013ம் ஆண்டு மீண்டும் மெக்டொனால்ட்ஸில் இணைந்தார். பிறகு 2015ம் ஆண்டு தலைமை செயலதிகாரி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனத்தின் மெனுக்கள் மற்றும் உணவகங்களை புத்துயிர் பெறுவதற்கும் கடைகளை மறுவடிவமைப்பதன் மூலமும், சிறந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் மிக பரவாலாக புகழப்பட்டவர் ஸ்டீவ்.

மொபைல் சேவை

மொபைல் சேவை

அவர் அமெரிக்காவில் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு இருமடங்காக அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது. இவரது தலைமையின் கீழ் மெக்டொனால்டு அதன் விநியோக மொபைல் கட்டண விருப்பங்களை அதன் வசதிக்காக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்டீவ் இந்த செயலால் அவர் மெக்டொனால்டின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.

இனி சிஇஓ கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி

இனி சிஇஓ கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி

இந்த நிலையில் ஸ்டீவிற்கு பதிலாக கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி தலைமை செயலதிகாரியாக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவிற்கு எனது நன்றி என்று கிறிஸ் தெரிவித்துள்ளார்.

ரொமான்ஸ் கூடாது

ரொமான்ஸ் கூடாது

இதே போல் கடந்த ஆண்டு இண்டெல் பிரையன் தனது ஊழியருடன் ஒருமித்த காதலுடன் இருந்த நிலையில், தனது பதவியை காதலுக்காக துறைந்தார். இந்த நிலையில் தற்போது மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய விதிகளில் ஒன்று. நிறுவன ஊழியர்கள் தங்களுக்குள் ரொமான்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதாகும். அதை மீறிய ஸ்டீவ் தற்போது தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US food giant MCDonald’s chief excutive officer steve Easterbrook leaves after dating employee

US food giant MCDonald’s chief executive officer steve Easterbrook leaves after dating employee, and the company's rules for managers prohibit them from become romantically involved with a staffs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X