அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். குறிப்பாக இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதித்தார். டிரம்பின் இந்த நடவடிக்கையால், இந்திய உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கும் என்றபோதிலும், அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் விலையில் கடுமையான உயர்வை எதிர்கொள்ள நேரிடும்.
அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கர்கள் தள்ளப்படுகின்றனர். விலை அதிகமாக இருந்தால் விற்பனை பாதிக்கும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் விலை தொடர்பாக ஏற்றுமதியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளனர் குறிப்பாக அமெரிக்க ஆடை சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்டுகள் இந்திய ஆடை உற்பத்தியாளர்களை அணுகி, டிரம்பின் வரி கொள்கையால் ஏற்படக்கூடிய பொருட்களின் விலை உயர்வில் ஒரளவு ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கேஎம் சுப்பிரமணியன் கூறுகையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் (வாங்குபவர்கள்) விலைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எங்களை தொடர்பு கொண்டனர். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளதால், (அமெரிக்கர்களின் பாக்கெட்டை காலி செய்ய போகும்) 26 சதவீத பரஸ்பர வரியின் தாக்கத்தை குறைக்க விலையில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் எங்களிடம் கூறினர். அடுத்த வாரம் நாங்கள் வர்த்தக அமைச்சகத்தை தொடர்பு கொள்வோம்.
அப்போது கூடுதல் தெளிவு கிடைக்கும். மற்ற ஏற்றுமதி நாடுகளுடன் ஒப்பிடும்போது, டிரம்ப் நமக்கு விதித்த வரி குறைவாகும். இந்த குறைந்த வரியை பயன்படுத்தி கொள்ள, நாம் நமது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு நமக்கு மூலதன மானியம் தேவை, அங்கு அரசாங்கம் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை மையமாக கருதப்படுகிறது. இங்கு உற்பத்தியாளர்கள் பல நாடுகளுக்கு அடிப்படை ஆடைகளை ஒன்றுக்கு 2 முதல் 5 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்கிறார்கள்.
நொய்டா ஆடைஏற்றுமதி கிளஸ்டரின் தலைவர் லலித் துக்ரால் கூறுகையில், அமெரிக்க வாங்குபவர்கள் ஏற்கனவே அங்கு அலுவலகங்களை கொண்ட இந்திய ஏற்றுமதியாளர்களின் கதவுகளை தட்டியுள்ளனர். எங்கள் லாப வரம்புகள் குறைவாக இருப்பதால், அதிகபட்சமாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்க முடியும். ஆனால் அவர்கள் வங்கதேசத்துடன் ஒப்பிடும்போது எங்களுக்கு அவர்கள் அதிக ஆர்டர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளான வியட்நாம் (46 சதவீதம்), வங்கதேசம் (37 சதவீதம்), கம்போடியா (49 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (30 சதவீதம்) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி கொஞ்சம் குறைவுதான்.
More From GoodReturns

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications