முடங்கியது அமெரிக்க அரசாங்கம்.. 7,50,000 ஊழியர்களுக்கு சம்பளம் கட்.. உணவு டெலிவரி செய்யும் அவலம்..!

அமெரிக்காவில் மத்திய அரசின் செயல்பாடுகள் 'ஷட் டவுன்' காரணமாக நிறுத்தப்பட்டிருப்பதால், அங்குள்ள அரசு ஊழியர்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 3 வாரங்களாக இந்த நிலை நீடிப்பதால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் கடந்த 22 நாட்களாக சம்பளமின்றிப் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பளமின்றிப் பணியாற்றும் 7.5 லட்சம் ஊழியர்கள் : கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அரசாங்க நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதால், சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் சம்பளம் பெறவில்லை. நிதி நெருக்கடி காரணமாக, இந்தப் பணியாளர்கள் தங்களின் அன்றாட செலவுகளைச் சமாளிக்க வழி தேடி, வாடகை வண்டிகள் ஓட்டுவது, உணவு விநியோகம் செய்வது மற்றும் உணவகங்களில் பகுதிநேர வேலை பார்ப்பது போன்ற கூடுதல் வேலைகளை செய்து வருகின்றனர்.

முடங்கியது அமெரிக்க அரசாங்கம்.. 7,50,000 ஊழியர்களுக்கு சம்பளம் கட்.. உணவு டெலிவரி செய்யும் அவலம்..!

அதே சமயம், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் வரை கடுமையாக உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் (NATCA) தலைவர் நிக் டேனியல்ஸ் கூறுகையில், "எங்களுக்குச் சம்பளம் ஒரு கட்டத்தில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அது எங்கள் செலவுகளையோ, கடன்களையோ குறைக்கப் போவதில்லை. பணம் தாமதமாகக் கிடைப்பது தற்போதைய தேவைகளை ஈடு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறைக்கு அதிக பாதிப்பு : இந்த ஷட் டவுன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறையாக விமானப் போக்குவரத்துத் துறை உள்ளது. சம்பளம் நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக தங்கள் வழக்கமான பணி நேரத்திற்குப் பிறகு பகுதிநேர வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பணியாளர்களிடையே கடும் மன அழுத்தம் நிலவுவதாக கூறப்படுகிறது.

ஷட் டவுன் என்றால் என்ன? ஏன் நடக்கிறது?: இந்தியாவில் நிதி ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்குவதைப் போல, அமெரிக்காவில் நிதி ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த நாளில் இருந்து மத்திய அரசு தனது பொருளாதார வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தொடங்கி, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்டமிடும்.

ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் புதிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்றால், அரசாங்கத்தின் அத்தியாவசியமற்ற பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதுவே அமெரிக்காவில் 'ஷட் டவுன்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த முறை ஷட் டவுன் ஏற்பட முக்கியக் காரணம், ஆளும் ஜனநாயகக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடே ஆகும். ஒபாமா ஹெல்த் கேர் சப்சிடி திட்டம் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.

ஜனநாயகக் கட்சியினர் சுகாதாரப் பாதுகாப்பு மானியத்தை அதிகரிக்க விரும்புகின்றனர். ஆனால் குடியரசுக் கட்சியினர் மானியத்தை அதிகரித்தால், அது அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி, பிற பணிகளுக்கு நிதிப் பற்றாக்குறையை உருவாக்கும் என்று கருதுகின்றனர். இந்த நிதி ரீதியான முரண்பாடுதான் இந்த நீடித்த ஷட் டவுன் நிலைமைக்கு முக்கிய காரணமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+