அநியாயம்..! சின்ன சின்ன தவறுக்கெல்லாம் விசா ரத்து செய்யும் அமெரிக்கா.. இந்திய மாணவர்கள் கண்ணீர்..!

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்கள் ஒரு சிறிய தவறு செய்தால் கூட அவர்களின் விசாக்களை ரத்து செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயிலக்கூடிய வெளிநாட்டு மாணவர்கள் தற்போது கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் ஒரு சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. அமெரிக்க அரசு வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது.

அநியாயம்..! சின்ன சின்ன தவறுக்கெல்லாம் விசா ரத்து செய்யும் அமெரிக்கா.. இந்திய மாணவர்கள் கண்ணீர்..!

ஏற்கனவே அமெரிக்காவில் விசா பெற்று கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி விசாவை ரத்து செய்து நாடு கடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் இந்திய மாணவர்கள் பலரும் சாலை விதிமுறைகளை மீறுவது என்பன உள்ளிட்ட சாதாரண மற்றும் சிறிய தவறுகளுக்கு கூட அவர்களுக்கான விசாக்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற தவறுகளுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் சில மாணவர்களுக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும். ஆனால் சாலை விதிமுறைகளை மீறுவது போன்ற சிறிய தவறுகளுக்கு கூட விசாவினை ரத்து செய்யும் நடைமுறை தற்போது அதிகரித்து வருவதாக மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இந்த மாணவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதா எனக்கு கண்காணித்து ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்களுக்கெல்லாம் தற்போது விசா ரத்து செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் வேகமாக கார் ஓட்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார் . பின்னர் அவர் அபராதம் செலுத்தியதை அடுத்து அரசு அவரை விடுவித்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்காக அவரின் விசா ரத்து செய்யப்படுவதாக மெசேஜ் வந்திருப்பதாக கூறுகிறார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் 300க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் விசா சிறு காரணங்களை காட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவின் மிசோரி நகரில் சென்று படிக்கும் ஒரு மாணவர் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாராம். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அவர் அடுத்த ஓராண்டு காலத்திற்கு காவல் நிலையத்தில் சென்று தான் மது அருந்தவில்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றுகளை தந்து வந்தாராம்.

இந்த சூழலில் திடீரென அவருடைய விசாவை அமெரிக்கா அரசு ரத்து செய்திருப்பதாக கூறுகிறார். இவ்வாறு விசா ரத்து செய்யப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் உங்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் உடனடியாக இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல்வேறு மாணவர்களும் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுவரை தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+