அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட வரி விதிப்புகளை தற்போது ஹாங்காங்கிற்கும் விரிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதும் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவிற்கு விதிக்கப்பட்ட வரிகளுக்கு இணையாக அமைகிறது. இந்த நடவடிக்கை உலகின் இரண்டு பெரும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்துகிறது.

ஹாங்காங்கிற்கும் இந்த வரிகளை விரிவுபடுத்துவது அமெரிக்கா-சீனா வர்த்தக உறவில் கூடுதலான சிக்களை ஏற்படுத்துகிறது. ஹாங்காங் தற்போது சுயாட்சி முறையில் இயங்கி வந்தாலும், சீனாவுடன் அதன் நெருங்கிய பொருளாதார உறவு, அரசியல் களம் வரையில் அதன் ஆதிக்கம் உள்ளது. இதன் வாயிலாக சீனாவுக்கு இணையாக ஹாங்காங் நாட்டின் மீதும் அமெரிக்கா வரி விதித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை ஹாங்காங்கின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஹாங்காங், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டிற்கும் இடையேயான வர்த்தகத்தில் பெருமளவில் சார்ந்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு வர்த்தகம் செய்ய முடியாத பல நிறுவனங்கள் ஹாங்காங் நாட்டில் இருந்து செயல்படும் வேளையில் அமெரிக்காவின் வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
அமெரிக்காவின் வரிக்கு ஏற்கனவே சீனா பதிலடி கொடுத்திருக்கும் வேளையில், தற்போது ஹாங்காங் வரி விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்கா சீனா மீது 10 சதவீத வரி விதிப்புக்கு சீனா, அமெரிக்காவின் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றின் மீது 15 சதவீத கூடுதல் இறக்குமதி வரியும், கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் சில வாகனங்கள் மீது 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக சீன நிதி அமைச்சகம் பிப்ரவரி 4ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்த கனடா, மெக்சிகோ நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள வேளையில் சீனா மீதான 10 சதவீத வரி மட்டும் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா ஹாங்காங் மீதும் வரி விதித்துள்ளது.
ஹாங்காங் பொருட்கள் மீது கூடுதல் வரியை அமெரிக்க அரசு விதித்துள்ளதால், உலகளாவிய விநியோக சங்கிலிகள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஹாங்காங்கில் செயல்படும் வணிக நிறுவனங்களும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் இந்த புதிய வரிகளால் பொருட்களை அதிகப்படியான விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும், இதற்கிடையில் இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் இதில் பலன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications