அமெரிக்காவில் இருக்கும் இந்திய டெக் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் பிற துறையில் பணியாற்றும் என்ஆர்ஐ-களுக்கு அமெரிக்க அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் குடியுரிமை சேவைகளை வெளிநாட்டவர்களுக்கு எளிதாக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக விசா அப்பாயின்மென்ட் அளிப்பது முதல் பல சேவைகளில் அதிகப்படியான தளர்வுகளை அளித்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கான ஹெச்1பி விசா ரினிவல் பணியை அவர்களது சொந்த நாட்டில் செய்யும் நடைமுறையை தளர்த்தி அமெரிக்காவிற்குள்ளேயே ரினிவல் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியரின் ஹெச்1பி விசா காலம் முடியும் பட்சத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து, விசா ரினிவல் செய்ய வேண்டும்.

இந்த நிலையை மாற்றும் விதமாக டிசம்பர் மாதம் முதல் ஒரு சோதனை திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது, இத்திட்டத்தின் கீழ் ஹெச்1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில பிரிவில் அமெரிக்காவிலேயே விசா-வை ரினிவல் செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும் டிசம்பர் மாதம் முதல் இத்திட்டத்தின் சோதனையை துவங்க உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் விசா சேவை பிரிவின் துணை உதவி செயலாளரான ஜூலி ஸ்ட்ஃபெட் கூறுகையில் இந்தியாவில் விசா அப்பாயின்மென்ட் பெற 3 மாதம் முதல் 1 வருடம் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவை நாங்கள் இந்த கண்ணோட்டத்தில் பார்க்க விருபம்வில்லை, இந்த நிலையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்நாட்டு விசா ரினிவல் திட்டத்தின் சோதனை முறையை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டம் இந்தியர்களுக்கு பயனளிப்பது மட்டும் அல்லாமல் விசா ரினிவல்-க்காக இந்தியா திரும்பி செல்லவோ அல்லது விசா அப்பாயின்மென்ட் பெறவோ தேவை இருக்காது என ஜூலி ஸ்ட்ஃபெட் தெரிவித்தார். இத்திட்டம் மூலம் விசா ரினிவல் பணிகள் வேகப்படுத்துவதோடு தாமதத்தை மொத்தமாக குறைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அதிகப்படியான இந்தியர்களை அமெரிக்கா தக்கவைக்க உள்ளது எனவும் தெரிவித்தார்.
அமெரிக்க அரசு 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த ஒரு சேவை தற்போது மீண்டும் நடைமுறைக்குக் வர உள்ளது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications