அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதலே நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார். ஒரு புறம் விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடு விதித்தார். மறுபுறம் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை பிடித்து சொந்த நாட்டிற்கே அனுப்பி வைத்து வருகிறார்.
எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து தங்கி இருப்பவர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு நாடு கடத்தி வருகிறது அமெரிக்க அரசு. அந்த வகையில் டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களிலேயே அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருந்த ஏராளமான இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் வெளியேறலாம் எனவும் உங்களுக்கு தேவையான விமான டிக்கெட்டையும் நாங்களே பெற்று தருகிறோம் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஹோம் லேண்ட் செக்யூரிட்டி துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்கே போகலாம் என கூறியிருக்கிறது. விமான டிக்கெட் பெற்று தருகிறோம் அதுமட்டுமில்லாமல் 2600 டாலர்கள் எக்ஸிட் போனஸாக தருகிறோம் என கூறியுள்ளது. 2200 அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 2.4 லட்சம் ரூபாய் ஆகும். அந்த வகையில் அமெரிக்காவில் முறையாக தங்கியிருக்கக் கூடிய இந்தியர்கள் CBP HOME செயலியை பயன்படுத்தி நீங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியா மட்டுமில்லாமல் கொலம்பியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் இந்த அறிவிப்பினை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக நாட்டினுள் நுழைந்தவர்களை அமெரிக்க அரசு illegal aliens என்ற கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணம் இல்லாமல் தங்கி இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் மீண்டும் தாய் நாடு திரும்புவதற்கு சிபிபி ஹோம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இது அவர்கள் தாங்களாகவே தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்வதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும். இதில் இந்தியர்கள் மற்றும் சீன நாட்டவர்கள், கொலம்பிய நாட்டவர்கள் பதிவு செய்து கொண்டால் அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு தேவையான டிக்கெட் விமான டிக்கெட் மற்றும் கூடுதலாக 2600 டாலர்கள் போனஸ் தொகையோடு அனுப்பி வைப்போம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . நீங்கள் அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை செய்தாலும் சரி பள்ளிக்கு சென்றாலும் சரி எதுவாக இருந்தாலும் இதில் பதிவு செய்து கொண்டு நீங்களாகவே தாய் நாடு திரும்பி விடுங்கள் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் கைது நடவடிக்கைக்கும் ஆளாகாமல் நீங்கள் பாதுகாப்பாக தாய்நாடு செல்ல வேண்டும் என்றால் இதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய வழி என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில் அமெரிக்க அரசு இந்திய குடிமக்களை இப்படி நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தூதரக ரீதியாக பேச்சு நடத்தி அவர்களை தாய்நாட்டிற்கு மரியாதையாக அனுப்பி வைக்கலாமே என பலரும் கூறுகின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications