ஈரானில் ஒரு வார காலமாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளையும் குறி வைத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது பதிலுக்கு ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க கட்டிடங்கள் மற்றும் தூதரகங்கள் , படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது.
போரை காரணமாக கூறி கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு முக்கிய வழித்தடமாக இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜல சந்தியை மூடிவிட்டது ஈரான். இதன் காரணமாக ஏராளமான கப்பல்கள் வளைகுடா நாடுகளிலேயே சிக்கி இருக்கின்றன. இந்தியாவுக்கு தேவையான 60 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வரவேண்டும். ஆனால் ஈரானின் இந்த செயலால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

தற்போது இந்தியாவிடம் போதிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. ஆனால் இந்தப் போர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் எத்தனை நாட்கள் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்பதை தெளிவாக குறிப்பிட முடியாது. எனவே இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் இது கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலை உயரும் பட்சத்தில் பல்வேறு பொருட்களின் விலைகளும் உயரும்.
இந்த சூழலில் தான் திடீரென அமெரிக்கா மனம் மாறி இருக்கிறது. இந்தியாவிற்கு ஒரு பெரிய சலுகையை தந்திருக்கிறது. அதாவது எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தற்போதைக்கு கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா தற்போது திடீரென ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அனுமதி தந்திருப்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது.

அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசண்ட் ஈரானுடன் நடந்து வரும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷ்யாவிடம் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய தற்காலிகமாக இந்த விலக்கினை தருகிறோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கிடையே ரஷ்யாவும் இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்திருக்கிறது எனவே இதன் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் வரத்து வழக்கம் போலவே நீடித்து பெட்ரோல் டீசல் விலையை உயராமல் பார்த்துக் கொள்ளும் என சொல்லப்படுகிறது.ஹார்முஸ் ஜலசந்தி உலக கச்சா எண்ணெய் விநியோகத்திற்கே மிக முக்கியமான வழித்தடம் ஆகும். ஈரான் இதனை அடைத்து உலகிற்கே பெரும் நெருக்கடியை தந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த ஒரு கப்பல் நுழைந்தாலும் அதனை தகர்ப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!



Click it and Unblock the Notifications