கச்சா எண்ணெய் உலக அரசியலில் எப்போதுமே முக்கிய இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் அமெரிக்க அரசாங்கம் அதிரடியாக வெனிசுலா நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததற்கும் இந்த கச்சா எண்ணெய் தான் காரணம்.
வெனிசுலா கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடு. ஆனால் வெனிசுலாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவக்கூடிய அரசியல் ரீதியிலான மோதல் காரணமாக அமெரிக்கா வெனிசுலா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தது. இதனால் அந்த நாடு தங்களுடைய கச்சா எண்ணெய் வளங்களை திறமையாக பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் தவித்து வந்தது.

இந்த சூழலில் தான் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் திடீரென அமெரிக்க ராணுவம் வெனிசுலா நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதனை எடுத்து வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இதனை எடுத்து வெனிசுலாவில் இருக்கக்கூடிய எண்ணெய் வளங்களை இனி அமெரிக்கா தான் நிர்வாகம் செய்யப் போகிறது என டிரம்ப் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நிலவி வந்ததற்கு இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது தான் காரணம். டிரம்ப் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் இந்தியா மீது 50 சதவீத வரியையும் விதித்தார். அண்மையில் தான் இந்த பிரச்சனைகள் சற்றே தணிந்தன.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மாற்றாக வெனிசுலாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க போகிறது என்று டிரம்பே அறிவித்தார் இந்த சூழலில் தான் மணி கண்ட்ரோல் தளத்தில் ஒரு முக்கியமான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது வெனிசுலாவிடம் இருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதற்கான முக்கியமான உரிமத்தை முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்று இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் நேரடியாக வெனிசுலா நாட்டிடம் இருந்து எந்த ஒரு பொருளாதார தடையும் இல்லாமல் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் அமெரிக்கா பொது உரிமம் தந்து இருப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் வெனிசுலா நாட்டை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து அல்லது முகவர்களிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்கலாம். அதனை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் ஆக மாற்றி பயன்படுத்தலாம் அல்லது வெண்ணிலாவில் இருந்து வாங்கி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வாங்கியும் பயன்படுத்தலாம்.
அமெரிக்காவின் வரி அழுத்தங்களால் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வந்தன. தற்போது அமெரிக்க அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கி பயன்படுத்துவதற்கு பெரிய கிரீன் சிக்னல் தந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதமே இந்த உரிமம் வேண்டி விண்ணப்பம் செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரடியாக வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது என்பதால் ரிலையன்ஸுக்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் கிடைக்கும் என்றும் இனி ரஷ்யாவுக்கு மாற்றாக ரிலையன்ஸ் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications