அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் பணியாற்றப் பெரிய அளவில் உதவி வரும் ஹெச்1பி விசா மீது முன்னாள் அதிபர் டொனால்டு டிரம் பல கட்டுப்பாடுகளையும், புதிய விதிமுறைகளையும் விதித்து வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் வர விடாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் அமெரிக்காவில் இருக்கும், அமெரிக்காவிற்குச் செல்ல காத்திருக்கும் பல கோடி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கினர்.
இந்நிலையில், ஜோ பைடன் ஆட்சியில், ஹெச்1பி விசா மீது டிரம்ப் அரசு விதித்த கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக ரத்து செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி குடியேற்ற அமைப்பு ஒன்று பைடன் அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
டிரம்ப் அரசின் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள்
டிரம்ப் அரசு ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வருபவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கக் கூடாது என்பதற்காக லாட்டரி விசா முறையை ரத்து செய்துவிட்டு அதிகச் சம்பளம் அதிகக் கல்வித் திறன் கொண்டவர்களுக்கு மட்டும் விசா வழங்கும் முறையை டிரம்ப் அரசு கொண்டு வந்தது. இந்த முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் லாட்டரி முறையை அமலாக்கம் செய்தது பைடன் அரசு.
அமெரிக்காவின் FAIR அமைப்பு
இந்த நடவடிக்கையை எதிர்த்து Federation for American Immigration Reform (FAIR) அமைப்பு ஊதிய அடிப்படையிலான விசா வழங்கும் முறையை ரத்து செய்வதன் மூலம் ஊதிய குறைவு, அமெரிக்க ஊழியர்களுக்கு முறையற்ற வகையிலான போட்டி உருவாகும் நிலை உருவாகும்.
சம்பள அடிப்படையிலான விசா
இதேவேளையில் சம்பள அடிப்படையிலான விசா வழங்கும் போது அமெரிக்காவிலும், அமெரிக்க நிறுவனங்களின் திறமையானவர்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலை உருவாகும், இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் FAIR அமைப்பு தெரிவித்துள்ளது.
FAIR அமைப்பின் விளக்கம்
1979ல் உருவாக்கப்பட்ட இந்த FAIR அமைப்பு அமெரிக்காவின் மிகப்பெரிய குடியேற்ற அமைப்பாக விளங்குகிறது. பைடன் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் டிரம்ப் அரசு அறிவித்த விதிமுறையை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டும் என DHS அமைப்பிற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
லாட்டரி முறையில் ஹெச்1பி விசா
இதேபோல் லாட்டரி முறையில் ஹெச்1பி விசா வழங்கும் போது ஒருவரின் சம்பளம், திறமை, அனுபவம் போன்ற எவ்விதமான காரணிகளையும் ஆராயப்படுவது இல்லை, ஒருவர் அமெரிக்கா செல்ல தகுதியானவரா என்பது மட்டும்தான் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு
இதன் மூலம் ஒரு நிறுவனத்திற்குத் திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பது பறிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு திறமையற்ற வெளிநாட்டவருக்குச் செல்கிறது என இந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
பைடன் அரசு முடிவு
ஆனால் பைடன் அரசு ஏற்கனவே டிரம்ப் அரசின் சம்பளம் அடிப்படையிலான விசா வழங்கும் முறையை ரத்து செய்து பழைய லாட்டரி முறையை மீண்டும் அமலாக்கம் செய்வதற்கான பணிகளையும் உத்தரவுகளையும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்பிற்கு உத்தரவு அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications