பஞ்சாப்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியாவை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ராணுவ விமானமானது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கி இருக்கிறது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பதவி ஏற்றதிலிருந்தே சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்க அரசு சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியா நாட்டவர்களை அவர்களின் நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்தது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 100க்கும் இந்தியர்களை அந்நாட்டு அரசு அடையாளம் கண்டு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி இருக்கிறது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று காலை புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க இருப்பதாக தெரிகிறது.
புதன்கிழமையான இன்று இந்த விமானம் இந்தியாவை வந்தடைந்தது.
அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ விமானம் டெக்சாஸிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தது. இவ்வாறு இந்த விமானத்தில் இருக்கும் நபர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த சட்டவிராத குடியேறிகள் மீது இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார். விமான நிலையத்தில் இவர்களை வரவேற்பதற்காக பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விவகாரங்கள் துறை அமைச்சர் குல்திவால் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். அடுத்த வாரம் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது இந்த சட்டவிரோத குடியேற்ற பிரச்சனை முக்கிய விவாத தலைப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
நரேந்திர மோடி முன்னதாக டிரம்புக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருநாட்டு தலைவர்களுமே சட்ட விரோதக் குடியேற்ற பிரச்சனை குறித்து விவாதித்தனர். இவ்வாறு அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள இந்தியர்களில் சிலர் முறையான வேலைக்கான விசா பெற்று அமெரிக்காவுக்கு சென்றவர்கள் என்றும் விசா முடிவடைந்த பிறகும் வெளியேறாமல் இருந்ததாலேயே அவர்கள் தற்போது வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .
ஒரு சிலர் சட்டவிரோதமாக முகமைகளை நம்பி பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சுமார் 1100 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்த காரணத்திற்காக நாடு கடத்தப்பட்டனர் .
அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் முறையான வழிகளில் மட்டுமே செல்ல வேண்டும் என தூதரக அதிகாரிகள் அறிவுரை வழங்குகின்றனர். அமெரிக்காவில் சுமார் 18000 இந்தியர்கள் இவ்வாறு சட்டவிரோத குடியேறிகளாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications