அமெரிக்காவில் புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்கவும் போராடி வருகிறது. இந்நிலையில் 2022ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா இலக்கை அடைய அமெரிக்க அரசு தனது பணிகளைத் துவங்கியுள்ளது.
இதன் படி ஜூன் மாதம் அமெரிக்க அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஹெச்1பி விசா விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அடுத்தகட்ட பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது.
அமெரிக்கக் குடியேற்ற அமைப்பு
அமெரிக்கக் குடியேற்ற அமைப்பிடம் ஜூன் மாதம் இந்தியர்கள் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் இருந்து ஹெச்1பி விசா பெறுவதற்காக 3,08,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை லாட்டரி முறையில் முதற்கட்ட தேர்வுகளைக் கடந்த வாரம் குடியேற்ற அமைப்பு செய்த நிலையில் தற்போது அடுத்தகட்ட ஆய்வுகளைச் செய்யத் துவங்கியுள்ளது.
ஹெச்1பி விசா
கடந்த வருடத்தை விடவும் 12.5 சதவீத விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், முதல் கட்டமாகக் குடியேற்ற அமைப்பு 85,000 விண்ணப்பங்களைத் தேர்வு செய்துள்ளது. அடுத்தகட்ட ஆய்வில் விண்ணப்ப ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர் 2022இல் ஹெச்1பி விசா வொர்க் பர்மிட் பெறுவார்.
ஹெச்1பி விசா விண்ணப்பம்
முதல் கட்ட ஹெச்1பி விசா விண்ணப்ப தேர்வை இதற்கு முன்பு விண்ணப்பதாரர் எதிர்கொண்ட விசா ஒப்புதல், விசா நிராகரிப்பு மற்றும் இதர விசா விண்ணப்ப நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுத்துத் தேர்வு செய்துள்ளதாகவும், ஹெச்1பி விசா எண்ணிக்கை முழுமையாக அளிக்க வேண்டும் என்பதற்காகக் கூடுதலாகவே விண்ணப்பத்தைத் தேர்வு செய்துள்ளதாக அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2 முதல் ஹெச்1பி விசா
அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை அமைப்பு அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாகக் கொண்டு இயங்குகிறது. இதன் மூலம் தற்போது துவங்கியுள்ள ஹெச்1பி விசா விண்ணப்ப ஆய்வுப் பணிகள் மூலம், ஆகஸ்ட் 2 முதல் ஒப்புதலை அளிக்க உள்ளது
அக்டோபர் 2021 முதல்
இதன் மூலம் ஹெச்1பி விசா விண்ணப்ப ஒப்புதல் பெறுவோர் அக்டோபர் 2021 முதல் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக பணியாற்றத் துவங்கலாம். மேலும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
ஹெச்1பி விசா பெறுவதற்காக அதிகளவில் விண்ணப்பம் செய்வதில் உலகிலேயே இந்தியா தான் அதிகம், குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள். தற்போது அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வாய்ப்புகள் உருவாகியுள்ள காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் சற்று கூடுதலாகவே ஹெச்1பி விசா விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஹெச்1பி விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஐடி ஊழியர்களை மட்டும் அல்லாலமல் ஐடி நிறுவனங்களையும் பயமுறுத்தி வந்த நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பெரும் நன்மையை அளித்துள்ளது.
ஜோ பைடன்
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த நாள் முதல் டிரம்ப் அரசு விதித்த அனைத்து ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளையும் ரத்து செய்தார். இது மட்டும் அல்லாமல் ஏற்கனவே நடைமுறையில் இருந்த அனைத்து நடைமுறைகளையும் மீண்டும் அமலாக்கம் செய்தார். இது இந்தியர்களுக்கும், இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் சாதகமாக அமைந்த நிலையில் ஆகஸ்ட் 2 முதல் அதிகளவிலான இந்தியர்கள் ஹெச்1பி விசா பெற உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications