அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதித்த 25% அபராத வரியுடன் சேர்ந்து ஏற்கனவே உள்ள 25% வரியுடன் மொத்தம் 50% வரியை ஆகஸ்ட் 27, 2025 முதல் அமலாக்கம் செய்துள்ளது. கிடைசி நேரத்திலாவது பேச்சுவார்த்தையின் மூலம் ஒத்திவைக்க இந்திய அரசு முயற்சி செய்தது ஆனால் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
சீனா பிளஸ் ஓன் கொள்கை மூலம் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடந்த சில ஆண்டுகளால் சிறப்பான ஏற்றுமதி வர்த்தகத்தை பெற்று வந்த நிலையில், இந்த வரி விதிப்பு பெரும் வர்த்தக பாதிப்பாக அமைந்துள்ளது. இந்த வரி விதிப்பு இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கார், வாகனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பார்மா, அலுமினியம், ஸ்டீல், இரும்பு பொருட்கள், காப்பர் பொருட்களுக்கு இந்த 50 சதவீத வரி விதிப்பில் இருத்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 50 சதவீத வரி விதிப்பால் பல மாநிலங்களில் உள்ள தொழில்துறைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மீதான தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த செய்தியில் எந்த மாநிலம், எந்த துறையில் அதிகம் பாதிக்கப்படும் என்பதை முழுமையாக பார்ப்போம்.
புதிய வரி விதிப்பின் தாக்கம்
டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்யும், இதனால் இந்திய பொருட்ரள் பிற நாட்டு பொருட்களை உடன் போட்டியிட்டு சந்தையில் விற்பனை செய்வது கடினமாகலாம்.
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள தொழில்துறைகள் இதன் தாக்கத்தை கடந்த சில வாரங்களாக உணரத் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிகத்தை பிற நாடுகளுக்கு மாற்றுவதற்காக பணிகளை செய்ய துவங்கியுள்ளனர். ஆனால் இது எந்த அளவுக்கு லாபம் அளிக்கும் என்பது காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாதிக்கப்படும் மாநிலங்கள் மற்றும் தொழில்கள்:
குஜராத் மாநிலத்தில், நெசவு, நகைகள் மற்றும் ரத்தின கற்கள் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் சுமார் 4 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளன.
மஹாராஷ்டிராவில், நகைகள் மற்றும் பொறியியல் தொழில்கள் 3 பில்லியன் டாலர் இழப்பையும், 50,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை பாதிக்க உள்ளது.
தமிழ்நாடு, டெக்ஸ்டைல், இறால் மற்றும் தோல் தொழில்களால் 2 முதல் 3 பில்லியன் டாலர் இழப்பையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை பாதிக்க உள்ளது.
உத்தர பிரதேசத்தில், தோல் மற்றும் கம்பளி தொழில்கள் 1.5 பில்லியன் டாலர் இழப்பையும், 30,000 வேலைவாய்ப்புகளையும் பாதிக்கின்றன.
மேற்கு வங்கத்தில், டெக்ஸ்டைல் மற்றும் இறால் தொழில்கள் 1 பில்லியன் டாலர் இழப்பையும், 20,000 வேலைவாய்ப்புகளை பாதிக்க உள்ளது.
ஆந்திர பிரதேசத்தில், இறால் மற்றும் கடல் உணவு தொழில்கள் 1 பில்லியன் டாலர் இழப்பையும், 20,000 வேலைவாய்ப்புகளையும் பாதிக்கின்றன.
ஹரியானாவில், ப்ரனீச்சர் மற்றும் கம்பளி தொழில்கள் 0.5 பில்லியன் டாலர் இழப்பையும், 5,000 வேலைவாய்ப்புகளை பாதிக்க உள்ளது.
பஞ்சாபில், தோல் மற்றும் பர்னீச்சர் தொழில்கள் 0.3 பில்லியன் டாலர் இழப்பையும், 5,000 வேலைவாய்ப்புகளையும் பாதிக்கின்றன.
கர்நாடகாவில், பொறியியல் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்கள் 0.5 பில்லியன் டாலர் இழப்பையும், 10,000 வேலைவாய்ப்புகளை பாதிக்க உள்ளது.
தமிழ்நாடு
அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான துறை அதிகம் பாதிக்கப்பட்டாலும், பெரிய அளவில் பாதிக்கப்படப்போவது டெக்ஸ்டைல் துறை தான். டெக்ஸ்டைல் காட்டிலும் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டாலும் இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் இத்துறை பாதிக்காது. இதற்கு அடுத்தப்படியாக டெக்ஸ்டைல் தான், இதன் மூலம் திருப்பூர் அதிகம் பாதிக்க உள்ளது.
பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்பு
இந்த 50% வரி விதிப்பு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆபத்து, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அரசு மற்றும் தொழில்துறை நிபுணர்கள், வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், புதிய சந்தைகளை கண்டறிவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சந்தையை தாண்டி வணிகத்தை பிற நாடுகளுக்கு திருப்புவது முக்கியமானதாக விளங்குகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications