அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் மோசமாக்கும் வகையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியின் மீது கூடுதலாக 25% வரி விதிக்கும் அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை கண்டிக்கும் வகையில், ஏற்கனவே அறிவித்த அபராத வரி பிரிவில் இந்த கூடுதல் 25 சதவீக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்-ன் இந்த புதிய உத்தரவு மூலம், பார்மா, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற சில விதிவிலக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர, இந்தியப் பொருட்கள் மீது மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

ரஷ்யா கச்சா எண்ணெய்:
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது குறித்து டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், நேற்று 24 மணிநேரத்தில் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறிய நிலையில் தற்போது 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டிரம்ப், ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு இந்தியா "நிதியுதவி" செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை, இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை என்று கூறிய டிரம்ப், இந்தியா "மிகப்பெரிய அளவில்" வரி உயர்த்துவேன் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, டிரம்ப் கெடுவித்த 24 நேரத்திற்கு முன்பாக வெறும் 14 மணி நேரத்தில் கூடுதல் 25% வரியை அறிவித்துள்ளார். இந்த உத்தரவு, 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் என்பதால், இந்தியாவும் ரஷ்யாவும் அமெரிக்க நிர்வாகத்துடன் இறக்குமதி வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிறிது கால அவகாசம் உள்ளது.

இந்திய-அமெரிக்க வர்த்தக உறவு:
இந்த கூடுதல் வரி விதிப்பு, இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளில் கடுமையான பதற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஜவுளி மற்றும் இயந்திரத் துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்படுவது, இந்தத் துறைகளின் போட்டித்தன்மையை குறைத்து, ஏற்றுமதி வருவாயில் பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்.
மேலும், இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களின் செலவினங்களை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளையும் பாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications