70-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி.. சிக்கித் தவிக்கப் போகும் கனடா.. டிரம்ப் அதிரடி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்து, 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் இறக்குமதிகளுக்கு 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புதிய நடவடிக்கையை, டிரம்ப் நிர்வாகம் "நீண்டகால வர்த்தக அநீதி மற்றும் சமனிலையற்ற நிலைகள்" என்ற காரணங்களை முன்வைத்து எடுத்துள்ளது.

இந்த உத்தரவின் படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றன. மேலும், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா இதற்கு முன் விதித்திருந்த 25% வரியை 35% ஆக உயர்த்தியுள்ளது.

70-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி.. சிக்கித் தவிக்கப் போகும் கனடா.. டிரம்ப் அதிரடி..!!

அதேபோல், சிரியாவுக்கு 41% வரி, லாவோஸ், மியான்மாருக்கு (பர்மா) 40% வரி, சுவிட்சர்லாந்துக்கு 39% வரி, ஈராக், செர்பியாவுக்கு 35% வரி,இந்தியா, மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்கு 25% வரி, பங்களாதேஷ், இலங்கை, தைவான், வியட்நாமுக்கு 20% வரி, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேஷியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்துக்கு 19% வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஏற்கனவே 15% அல்லது அதற்கு மேல் வரி விதித்து கொண்டிருக்கும் EU நாட்டுப் பொருட்களுக்கு புதிய வரி இல்லை. ஆனால், 15%க்கு குறைவான வரி உள்ள EU பொருட்களுக்கு, புதிய வரி விகிதம் 15% தற்போதைய அமெரிக்க வரி விகிதம் எனக் கணக்கிடப்படும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய வரிகள் அமலுக்கு வருவதற்கு முன் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது, 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதிப்பாக இருக்கும் புதிய வரிகள், செயற்குழு ஆணை கையெழுத்தான 7 நாட்களில் அமலுக்கு வரும்.

ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்பாக கப்பல்களில் ஏற்றப்பட்டு, அடுத்த அக்டோபர் 5ஆம் தேதி முன் அமெரிக்காவுக்கு வருவோர் புதிய வரிகளுக்கு உட்பட மாட்டார்கள். மேலும், கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி பொருட்களுக்கு புதிய 35% வரி, செயற்குழு ஆணை வெளியான உடனே தேதி அமலுக்கு வரும்.

இந்த வரி விதிப்பு குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், "நாம் வர்த்தகத்தில் சரியான சமநிலை இல்லாததால், சில நாடுகள் நம்முடன் ஒத்துழைக்காமல், நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள். அதற்காக நாம் புதிய வரிகளை அறிவித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. மேலும் அதற்காக டிரம்பின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+