இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசின் துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லான்டவ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ரேசினா மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்திருக்கும் லான்டவ், "பயங்கரவாத எதிர்ப்பு முதல் கடல் வழி சுதந்திரம் வரை இரு நாடுகளும் பொதுவான பாதுகாப்பு நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு அடித்தளம் அமையும்" என்றார்.
அமெரிக்காவை மாற்று எரிசக்தி ஆதாரமாகப் பார்க்க இந்தியாவுக்கு லான்டவ் பரிந்துரைத்தார். "அமெரிக்கா எரிசக்தி வளம் மிகுந்த நாடு; இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்த விழைகிறது. குறுகிய மற்றும் நீண்டகால எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய தயாராக உள்ளோம். இந்தியா தன் எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த ஆதரவளிக்க அமெரிக்கா சிறந்த நிலையில் உள்ளது" என்றார்.

பொருளாதார ரீதியாக, நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து லான்டவ் சில அப்டேட்டுகளை வழங்கினார். இருதரப்பு வர்த்தகம் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், "இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தம் மகத்தான பொருளாதார சாத்தியக்கூறுகளைத் திறக்கும் என்பதால், நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரியில், இருநாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்தன. இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தது. ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத தண்டனை வரிகளையும் அமெரிக்கா நீக்கியது.
பல பொருட்களின் இறக்குமதி வரிகளைக் குறைக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. தொழிற்சாலைப் பொருட்கள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் உள்ளிட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களின் வரிகளை நீக்கவோ/குறைப்பதற்கோ இந்தியா சம்மதித்தது.
ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், $500 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்கள், விமானங்கள், பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் சட்ட வரைவை இறுதி செய்வதற்காக இரு நாடுகளின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர்கள் இந்த வாரம் வாஷிங்டனில் சந்திக்க இருந்தனர். ஆனால், ட்ரம்ப் வரிகள் தொடர்பான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications