அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை மீண்டும் எச்சரித்துள்ளார். டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து இறக்கப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்போடு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை விமர்சனம் செய்து அபராத வரி விதிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப் இன்று தனது சமூக வலைத்தளமான Truth Social பதிவில், "இந்தியா பெரிய அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்கி, அதை திறந்த சந்தையில் பெரும் லாபத்திற்காக விற்கிறது. இந்தியாவுக்கு உக்ரைனில் எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள் என்பது குறித்து கவலை இல்லை, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனை அந்நாட்டு ராணுவத்திற்கு போர்க் கருவியாக திகழ்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் இந்த செயலுக்கு பதிலடியாக, இந்தியாவால் அமெரிக்காவுக்கு செலுத்தப்படும் வரியை பெரிய அளவில் உயர்த்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இந்த பதிவில் புதிய வரி விகிதம் குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
டிரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்பும் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்திய நிறுவனங்களின் நிலைப்பாடு மாறுப்படவில்லை என்பது தான் நிதர்சனம்.
இந்திய அரசு வட்டாரங்கள் என்டிடிவி -யிடம் கூறுகையில், இந்த வரி உயர்வு இந்திய பொருளாதாரத்தில் "குறைவான தாக்கத்தை" மட்டுமே ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் வெறும் 0.2 சதவீத இழப்பை தாண்டாது என்றும் அரசு அதிகாரிகள் கணித்துள்ளனர். மேலும் இந்த பாதிப்பை இந்திய அரசு எளிதாக நிர்வகிக்கக்கூடிய அளவிலானது என்று கருதப்படுகிறது.
இதோடு சனிக்கிழமை அரசு வட்டாரங்கள் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இப்போதைக்கு நிறுத்தப்போவதில்லை என்றும் அரசு வட்டாரங்கள் கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
டிரம்பின் இந்த புதிய அச்சுறுத்தல், உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்த்து அமெரிக்காவின் நிலைப்பாடும், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கும் நாடுகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்வது, உக்ரைனில் நடக்கும் போருக்கு மறைமுகமாக உதவுவதாக டிரம்ப் கருதுகிறார். இதனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications