உலக நாடுகளை தனது வரி விதிப்பு மூலம் மிரட்டி வரும் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2வதாக இந்தோனேசியாவுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தோனேசியாவின் ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 32% என்ற வரி 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் அமெரிக்க பொருட்களுக்கு இந்தோனேசிய சந்தையின் அனைத்து துறை கதவுகளும் திறக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு அஞ்சி பல நாடுகள் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகிறது. இதுவரையில் அமெரிக்கா ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு பின்பு பிரிட்டன், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள வேளையில் 4வது நாடாக இந்தோனேசியா கையெழுத்திட்டு உள்ளது.
இந்தியா உடன் அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கும் வேளையில், அமெரிக்கா இந்தியாவிவ் பால் வள துறை மற்றும் விவசாய துறையில் அமெரிக்க பொருட்களையும், முதலீட்டையும் அனுமதிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்து வரும் காரணத்தால் இந்திய அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு உலகின் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிரம்ப் தனது "ட்ரூத சோசியல்" (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி , இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto உடன் நேரடி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாயிகள், மாட்டு வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு இந்தோனேசியாவின் 280 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சந்தையில் வர்த்தகம் செய்ய முழு அணுகல் கிடைக்கிறது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியா அமெரிக்காவிடம் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாய பொருட்கள் மற்றும் 50 போயிங் ஜெட் விமானங்களை வாங்க உறுதியளித்துள்ளது.
மாற்றாக, அமெரிக்காவுக்கு வரும் இந்தோனேசிய பொருட்களுக்கு 19% என்ற அடிப்படை வரி விதிக்கப்படும், அதேசமயம் அமெரிக்க பொருட்கள் இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் இருக்கும் அனைத்து தடைகளும், கட்டுப்பாடுகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க அரசின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கான டென்லைன் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முன் செய்யப்பட்டது மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது.
டிரான்ஷிப்மென்ட் பிரச்சனை:
டிரான்ஷிப்மென்ட் (transshipment) என்றால், ஒரு நாட்டிலிருந்து வந்த பொருட்கள் மற்றொரு நாட்டின் வழியாக மூன்றாவது நாட்டுக்கு அனுப்பப்படும் செயல்முறையாகும். உதாரணமாக, இந்தோனேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பொருட்கள் வரும்போது, அதில் உயர் வரி கொண்ட நாடுகளிலிருந்து வந்த பொருட்கள் சேர்ந்திருந்தால், இந்தோனேசியாவால் செலுத்தப்படும் 19% தவிர கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் எப்படி பலனளிக்கும்?:
இந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பல வழிகளில் பயன் தரும். முதலில், இந்தோனேசியாவின் 280 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சந்தையில் அமெரிக்க விவசாயிகள், மாட்டு வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் அனைத்து விதமான பொருட்களையும் விற்க முடியும், இதேபோல் அமெரிக்க வர்த்தகர்கள் அனைத்து துறையிலும் முதலீடு செய்ய கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவும் இந்தோனேசியாவும் ஒரு புதிய வர்த்தக உறவை உருவாக்கியுள்ளன, இது உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!



Click it and Unblock the Notifications