ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ராணுவ படைகள் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு மோதல் உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது, ஆசியா முதல் அமெரிக்கா வரையில் அனைத்து நாடுகளின் பங்குச்சந்தையும் பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான போர் '4-5 வாரங்கள்' நீடிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் தாக்குதலின் வீரியம் குறைந்த நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதோடு அமெரிக்க முக்கிய தலைவர்கள் ஈரான் மீதான போர் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடர அமெரிக்கா தயராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஈரான் மீதான போருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் வேளையிலும், அமெரிக்க பொருளாதாரம் கடனில் தத்தளிக்கும் காரணத்தாலும் இந்த போருக்கு எவ்வளவு செலவாகும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் போர் மற்றும் அதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு கொடுத்த பாதுகாப்பு என சுமார் 2.3 டிரில்லியன் டாலர் தொகையை செலவு செய்தது. இதேபோல் ஈரான் மீதான போரும் பெரும் சுமையாக மாறலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் ஈரான் மீதான போரின் ஆரம்ப கட்ட செலவுகள் குறித்த விபரம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆபரேஷன் எபிக் ஃப்யூரி
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற கூட்டு நடவடிக்கையின் முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 779 மில்லியன் டாலர் தொகையை செலவானதாக துருக்கியின் Anadolu செய்தி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
ஆனால் போருக்கு முன் ராணுவ தயாரிப்புகள், விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் பிராந்திய வளங்களை மாற்றியமைத்ததற்கு 630 மில்லியன் டாலர் தொகை போர் துவங்குவதற்கு முன்பாகவே செலவானது என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் F-35, F-22, F-18 போன்ற போர் விமானங்களின் இயக்க செலவு 271.34 மில்லியன் டாலர். USS ஜெரால்ட் ஆர்.ஃபோர்ட் போன்ற போர் கப்பல் இயக்க தினசரி செலவு 6.5 மில்லியன் டாலர். மொத்தத்தில் முதல் 72 மணி நேர 'கேஷ் பர்ன் ரேட்' 1.43 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போர் மற்றும் செலவுகள்
2023 அக்டோபர் முதல் 2025 செப்டம்பர் வரையிலான காலத்தில் அமெரிக்க போருக்காக செய்த செலவுகளின் தரவுகளை பிரவுன் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவின் செலவுகள் பெரிதும் அதிகரித்துள்ளன. இஸ்ரேலுக்கு ராணுவ உதவியாக 21.7 பில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. யெமன், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கு 9.65-12.07 பில்லியன் டாலர் செலவானது. இதன் மூலம் வெறும் 2 வருட காலத்தில் 31.35-33.77 பில்லியன் டாலர் அளவில் செலவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் கிடைத்த பாடம்
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஈடுபட்டது. அசோசியேட்டட் பிரஸ் (AP) அறிக்கையின்படி, ராணுவத் துறைக்கு 1 டிரில்லியன் டாலருக்கும் மேல் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த போரின் செலவுகளில் - பென்டகன் அடிப்படை பட்ஜெட் உயர்வு, மறுகட்டமைப்பு உதவி, கடன் வட்டி, வீரர்களின் நீண்டகால மருத்துவ செலவு ஆகியவை சேர்த்து மொத்த செலவு 2.3 டிரில்லியனை தாண்டியது. இது தற்போதைய ஈரான் போருக்கு பாடமாக அமைகிறது.
மொத்தத்தில், ஈரான் போர் அமெரிக்காவுக்கு பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் போன்ற நீண்டகால போர்கள் டிரில்லியன் டாலர் சுமையை தரும் என்பதால் அமெரிக்கா - டிரம்ப் விரைவாக இந்த போரை முடிவுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரான் இனி தலைதூக்கவே முடியாது; ஆட்சியிலும் ராணுவத்திலும் பிளவு - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்



Click it and Unblock the Notifications