அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் இந்தியாவில் இருந்து தனது டெக் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்தியாவில் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பல அலுவலகங்களை வைத்திருக்கும் ஜேபி மோர்கன் சுமார் 35,000 ஊழியர்களை டெக்னாலஜி மற்றும் ஆப்ரேஷன்ஸ் பணிகளுக்கான ஏற்கனவே பணியமர்த்தியுள்ளது.
இந்நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்து இந்திய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுப் புதிதாக 4000 ஊழியர்களை இந்திய வர்த்தகத்தில் பணியமர்த்த முடிவு செய்துள்ளது அமெரிக்காவின் ஜேபி மோர்கன்.
அமெரிக்காவின் ஜேபி மோர்கன்
ஜேபி மோர்கன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், வர்த்தகத்திற்கும் மிக முக்கியத் தேவையாக டெக்னாலஜி இருக்கும் காரணத்தால் தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும், புதிய தொழில்நுட்பத்தில் இயங்கவும் முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் அதிக வேலைவாய்ப்பு
இதற்காக ஜேபி மோர்கன் தற்போது கிளவுட், பிக் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிஜிட்டல் தளம் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய பிரிவுகளில் அதிக ஊழியர்களையும், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள கூடுதலான 4000 ஊழியர்களில் பெரும் பகுதி பெங்களூர் டெக் சென்டரில் பணி அமர்த்தப்படுவார்கள் என ஜேபி மோர்கன் இந்தியா பிரிவின் ஹெச்ஆர் கவ்ரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
கொரோனா உதவி
மேலும் இந்தியா தற்போது கொரோனா தொற்றால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், ஜேபி மோர்கன் இந்தியாவிற்குச் சுமார் 2 மில்லியன் டாலர் அளவிலான உதவிகளை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வர்த்தகம்
கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியா மீண்டு வர நீண்ட காலம் ஆகும் எனக் கூறப்படுவதால், வெளிநாட்டு வர்த்தகம் வெளியேறுமோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் புதிதாக 4000 ஊழியர்கள் அறிவிப்பு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications