22 பில்லியன் டாலர் 'விசா மோசடி'.. அமெரிக்க அரசு அதிரடி.. இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தொடர்பா..?

டிரம்ப் தலைமையிலான அரசு விசா மற்றும் கிரீன் கார்டு சேவையில் நடக்கும் மோசடிகளையும், முறைகேடுகளையும் கண்டறியத் தனி டாஸ்க் போர்ஸ் அமைத்தது. இதன் மூலம் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான விசா மோசடியைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்கத் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவில் செயல்படும் பிற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதில் பலகட்ட முறைகேடுகள் நந்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

22 பில்லியன் டாலர் 'விசா மோசடி'.. அமெரிக்க அரசு அதிரடி.. இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தொடர்பா..?

இந்த டாக்ஸ் போர்ஸ் கண்டறிந்த விஷயங்களின் அடிப்படையில் தான் அமெரிக்க அரசு தற்போது 8 முன்னணி ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் PERM திட்டத்தின் கீழ் சேவை பெறுவதில் தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த தடை மூலம் காக்னிசென்ட், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, மைக்ரோசாப்ட், அடோப் ஆகிய 8 நிறுவனங்கள் PERM திட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியாது, அதேபோல் தடை செய்யப்பட்ட காலத்தில் ஏற்கனவே விண்ணப்பம் செய்த PERM விண்ணப்பத்தையும் ஆய்வு செய்ய முடியாது.

Also Read

22 பில்லியன் டாலர் விசா மோசடி குறித்து அமெரிக்கத் தொழிலாளர் துறைச் செயலர் கீத் சாண்டர்லிங் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கட்டமைப்பு ரீதியிலான மோசடிகள் அதாவது Systemic Fraud நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கீத் சாண்டர்லிங் தெரிவித்தார்.

இந்த ஒரு விசாரணை வெறுமனே பண இழப்பை கண்டுபிடிப்பதைத் தாண்டி அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார்.

இந்த 22 பில்லியன் டாலர் விசா மோசடியில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பல்கலைக்கழகங்களும் முக்கியமான பங்கு விதிப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்கக் கல்லூரிகள் தான் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விசா கிடைப்பதை எளிதாக்கும் மையங்களாகச் செயல்படுவதாக கீத் சாண்டர்லிங் குற்றம்சாட்டினார்.

Recommended For You

வெளிநாட்டினர் தங்களது தகுதிகள் குறித்து தவறான அல்லது போலியான தகவல்களை அளித்து வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். அப்படி வரும் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவின் சில பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார். இதனால் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை பெறுவது மட்டும் அல்லாமல் பின்னர் வேலைவாய்ப்பு வாயிலாக நிரந்தரமாக அமெரிக்காவில் தங்குவதற்கும் குடியுரிமை பெறுவதற்கும் இந்த வேலைவாய்ப்புகள் வழிவகுத்துள்ளது என்றும் கீத் சாண்டர்லிங் குற்றம்சாட்டினார்.

இத்தகைய முறைகேடுகளால் அமெரிக்கத் தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என இந்த 22 பில்லியன் டாலர் மதிப்பிலான விசா மோசடி குறித்து கீத் சாண்டர்லிங் விவரித்தார்.

மேலும் கீத் சாண்டர்லிங் கூறுகையில் 2009ஆம் ஆண்டில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் விசா விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 2,30,000 பேருக்கு ஹெச்1பி விசாவும், 1,00,000 பேருக்கும் PERM திட்டம் கீழ் கிரீன் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்க ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

8 நிறுவனங்கள் மீதான தடை நடவடிக்கை என்பது அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக எடுக்கப்பட்டவை. இந்த நடவடிக்கை மூலம் மோசடிகளைத் தடுப்பது, குடியுரிமை கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+