மேற்காசிய நாடுகளில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போர் பதற்றம் கொஞ்சம் கூட தணியவில்லை. தொடர்ச்சியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதலை நிறுத்தவில்லை.
ஈரான் போர் முடிவுக்கு வராத சூழலில் அமெரிக்காவின் ஒரு நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் நீடிக்கக்கூடிய சூழலில் அமெரிக்கா அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையை திடீரென பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறது. மணி கண்ட்ரோல் தனம் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

அமெரிக்காவிடம் இருக்கக்கூடிய அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட மிக முக்கியமான, அதே வேளையில் பேரழிவை ஏற்படுத்த கூடிய ஒரு ஏவுகணை தான் LGM-30G Minuteman III ஏவுகணை. இந்த ஏவுகணையை தங்களின் ஆயுத கிடங்கில் இருந்து வெளியில் எடுத்து அமெரிக்கா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Minuteman III ஏவுகணை அமெரிக்காவின் அதிக சக்தி வாய்ந்த க ஒரு ஏவுகணை. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 15 ஆயிரம் மைல்களை கடக்கும் அதிவேக திறன் கொண்ட ஏவுகணை. அமெரிக்காவில் இருந்து ஏவினால் இது ஒரு நிமிடத்தில் மற்றொரு கண்டத்தில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும். ஹிரோஷிமா , நாகசாகில் பயன்படுத்திய அணுகுண்டுகளை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை இது சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான மோதல் ஆறாவது நாளை எட்டி இருக்கக்கூடிய சூழலில் அமெரிக்கா அடுத்ததாக என்ன மாதிரியான தாக்குதல்களை தொடுக்கும் என கணிக்கமுடியாத சூழலில் தான் இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்காவில் கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளி படைத்தளத்திலிருந்து இரவு நேரத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் இந்த ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த ஏவுகணை அமைப்பின் செயல் திறன் மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் வகையில் இந்த சோதனை செய்யப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. இது ஒரு வழக்கமான சோதனை தான் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய அணு ஆயுத கிடங்கில் இருக்கும் ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் அவ்வப்போது பரிசோதனை செய்து அவற்றின் தயார் நிலையை மதிப்பீடு செய்து வைக்கும்.
அதாவது திடீரென ஒரு போர் ஏற்பட்டால் உடனே தாக்குதல் நடத்தும் வகையில் ஆயுதங்களும் உபகரணங்களும் தயாராக இருக்கிறதா என்பது மதிப்பீடு செய்யப்படும். அதன் ஒரு பகுதியாக தான் இந்த ஆயுத சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது நடக்கக்கூடிய சர்வதேச நிகழ்வுகளுக்கும் இந்த ஏவுகணை பரிசோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வழக்கமான ஒரு பரிசோதனை தான் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications