அமெரிக்காவில் 2வது நாளாக ரத்தக்களறி.. இன்போசிஸ், விப்ரோ ADR பரிதாபம்..!!

அமெரிக்க AI நிறுவனமான அன்த்ரோபிக் தனது க்ளாட் AIக்கு புதிய ஆட்டோமேஷன் கருவியை அறிமுகப்படுத்தியதால், உலகம் முழுவதும் இருக்கும் ஐடி, SAAS நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் நியூயார்க் பட்டியலிடப்பட்ட இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ADRs பெரும் இழப்பை சந்தித்தன.

அமெரிக்க நேரத்தின் படி பிப்.4 காலை 9:30 மணியளவில் இன்ஃபோசிஸ் ADR 4 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. விப்ரோ ADR 1 சதவீதத்திற்கு மேல் இழந்தது. இன்ஃபோசிஸ் ADR அதிகபட்சம் 5.5 சதவீதம் சரிந்து 16.49 டாலருக்கு வந்தது. விப்ரோ ADR 4.8 சதவீதம் குறைந்து $2.52ஆக குறைந்தது. ஆனால் அடுத்த 90 நிமிடங்களில் இரு ADRகளும் சரிவிலிருந்து மீண்டு உயர்வுக்கு திரும்பியுள்ளது.

அமெரிக்காவில் 2வது நாளாக ரத்தக்களறி.. இன்போசிஸ், விப்ரோ ADR பரிதாபம்..!!

பிப்ரவரி 3இல் இன்ஃபோசிஸ் ADR 17.32 டாலராகவும், விப்ரோ ADR $2.64ஆகவும் முடிந்தன. விப்ரோ ADR $2.51 முதல் 2.68 டாலர் வரை வர்த்தகமானது. இது முந்தைய நாள் முடிவை விட சிறிய லாபத்தை காட்டியது.

பிப்.4ஆம் தேதி வர்த்தகத்தில் அமெரிக்க நேரத்தின் படி காலை 10.12 மணியளவில் அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. டவ் ஜோன்ஸ் யுஎஸ் டெக்னாலஜி இன்டெக்ஸ் 8,472.7 புள்ளிகளில் முடிந்தது. 173.94 புள்ளிகள் (2.01 சதவீதம்) சரிந்தது. நாஸ்டாக்-100 டெக்னாலஜி செக்டார் 12,256.39 புள்ளிகளில் முடிந்தது. 342.25 புள்ளிகள் (2.72 சதவீதம்) இழந்தது.

நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் டெக்னாலஜி இன்டெக்ஸ் 7,054.9 புள்ளிகளில் முடிந்தது. 244.23 புள்ளிகள் (3.35 சதவீதம்) குறைந்தது. இது இன்றைய அதிகபட்ச சரிவாகும். ரஸ்ஸல் 1000 ஈக்வல் வெயிட் டெக்னாலஜி 5,421.51 புள்ளிகளில் முடிந்தது. 65.66 புள்ளிகள் (1.20 சதவீதம்) சரிந்தது.

எஸ்&பி 500 இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி செக்டார் 5,386.7 புள்ளிகளில் முடிந்தது. 105.24 புள்ளிகள் (1.92 சதவீதம்) இழந்தது. அனைத்து முக்கிய டெக் குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகமாகி வருகிறது. இது AI போட்டி அதிகரிப்பு மற்றும் சந்தை அச்சம் காரணமாக ஏற்பட்டது.

அன்த்ரோபிக் க்ளாட் கோவொர்க் AIக்கு புதிய ஆட்டோமேஷன் தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. 11 ப்ளகின்களுடன் வந்த இந்த கருவி சட்டம், விற்பனை, மார்க்கெட்டிங், தரவு பகுப்பாய்வு ஆகிய பணிகளை தானாக செய்யும். இதனால் பல துறைக்கு அதிக கட்டணத்தில் சேவை அளித்து வரும் SAAS நிறுவனங்கள் இதில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு டெக் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க சந்தை முதலீட்டாளர்கள் AI போட்டி அதிகரிப்பதால் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகளை அடுத்தடுத்து விற்பனை செய்தனர். இதன் அச்சம் இந்திய ஐடி நிறுவனங்களின் ADRs-க்கும் பரவியது. ADRகள் வெளிநாட்டு நிறுவன பங்குகளை அமெரிக்க சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் ஒரு பத்திரம்.

இந்த ஏஐ சேவை மூலம் ஐடி நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்கள் குறுகிய காலத்தில் இழப்பை சந்திக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் AI தொழில்நுட்பம் ஐடி துறையை மாற்றி, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் ஐடி நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்தளவுக்கு வர்த்தகம் மற்றும் வருமானத்தை பெறுகிறது என்பதில் தான் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+