டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து விசா, கிரீன் கார்டு வழங்குவதில் பெரும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் கடுமையாக்கி வரும் வேளையில் அடுத்த முக்கிய நடவடிக்கையாக, அந்நாட்டு அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமையை ரத்து செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய குடியுரிமை ரத்து நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது டிரம்ப் அரசு, இதை Denaturalisation Drive என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுமார் 40 பேரின் குடியுரிமை ரத்து செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த 40 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் இருப்பது தான் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் விசா வாயிலாக அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரும் பிரச்சனையாகவும், விசா ரத்து செய்யும் அளவிலான நடவடிக்கைகளை எடுக்கும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது.
இந்த நிலையில் 40 பேரின் குடியுரிமையை ரத்து செய்வதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த 40 பேரின் குடியுரிமை ரத்து செய்ய டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்க முக்கியமான காரணம் இவர்கள் மீது இருக்கும் கடுமையான குற்றச்சாட்டுகள்.
இந்த 40 பேரின் மீது வெளிநாட்டு அரசுக்கு ஏஜெண்ட் ஆக செயல்பட்டது, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டது, பாலியல் குற்றம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது தகவல்களை மறைத்தது அல்லது தவறான தகவல்களைக் கொடுத்துப் போன்ற குற்றச்சாட்டுகள் வரையில் குடியுரிமை ரத்து செய்வதற்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த 40 பேரில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு இந்தியர், இவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த பல்விந்தர் சிங். அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கின் படி பல்விந்தர் சிங் குடியேற்றம் தொடர்பான விண்ணப்பங்களில் போலியாகத் தகவல்களைக் கொடுத்து குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1992 ஆம் ஆண்டு பல்விந்தர் சிங் என்ற பெயரில் குடியுரிமை பெற்ற முதல் முறையாக முயற்சி செய்துள்ளார், ஆனால் 2003ல் வேறு ஒரு அடையாளத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பு (PR) பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகு, 2009-ல் அந்த இரண்டாவது போலி அடையாளத்தைப் பயன்படுத்தி அமெரிக்கக் குடியுரிமை பெற்றதாக அமெரிக்க நீதித்துறை தனது வழக்கில் தெரிவித்துள்ளது. இப்படி 40 பேரின் மீது வெவ்வேறு காரணங்கள் அடிப்படையில் 40 பேரின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications


