அடிசக்க.. 90 டாலருக்கு குறைந்த கச்சா எண்ணெய் விலை.. டிரம்ப்-ன் வீழ்ச்சியால் புதிய டிவிஸ்ட்..!

அமெரிக்க மிட்டேரம் தேர்தல் முடிவுக்கும், ஈரான் மீதான போருக்கும், கச்சா எண்ணெய் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் வேளையில், மிட்டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று கச்சா எண்ணெய் விலை சரிவு.

மிட்டேர்ம் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில் இன்று கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் சரிந்து ஒரு பேரல் விலை 89.40 டாலராகக் குறைந்தது.

அடிசக்க.. 90 டாலருக்கு குறைந்த கச்சா எண்ணெய் விலை.. டிரம்ப்-ன் வீழ்ச்சியால் புதிய டிவிஸ்ட்..!

இதேபோல் உலக நாடுகள் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய விலை அளவுகோலாக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 8 சதவீதம் சரிந்து ஒரு பேரல் விலை 95.41 டாலராகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, வெளிநாட்டு இறக்குமதியை நம்பி இருக்கும் நாடுகள் பெருமூச்சு விட துவங்கியுள்ளது. டிரம்ப்-ன் வீழ்ச்சி பல நாடுகளுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

Also Read

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் உச்சத்தில் இருந்த போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 121 டாலர் வரையில் சென்றது யாராலும் மறக்க முடியாது. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்தி யூரேனியம் செறிவூட்டும் தளத்தை அழிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்திய போது கச்சா எண்ணெய் விலை மீண்டும் 110 டாலர் வரையில் உயர்ந்தது.

இதை தொடர்ந்து இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு இந்த வார துவக்கத்தில் ஈரான் அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுத்த நிலையில் இந்த வாரம் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

Recommended For You

இந்த நிலையில் மிட்டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று டிவிட்டரில் துணை அதிபரான ஜேடி வான்ஸ் செய்த பதிவில், நாங்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம் ஈரான் உடன் போர் செய்தது தான். இதை அதிபர் டிரம்ப்-ம் நேற்று கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் ஈரான் போரில் இருந்து டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தை முழுமையாகப் பின்வாங்கக் கோரி மசோதாவை முன்வைக்கலாம்.

இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால், இந்த மசோதா எளிதாக ஒப்புதல் பெற்று விரைவில் போர் முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது

இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 -75 டாலருக்குச் செல்ல துவங்கும். இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவு குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும், ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து காப்பாற்றப்படும், பணவீக்கம் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+