டிரம்ப் வீழ்ச்சியால் அதிரும் அமெரிக்கா.. AI உட்பட 4 முக்கிய துறைகளுக்கு செக் வைக்கும் ஜனநாயகக் கட்சி!

அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில் ஏஐ முதல் பல துறைகளில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக ஏஐ துறையில் அதிகப்படியான நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் வரும் எனக் கணிக்கப்படுகிறது. ஏஐ துறையைத் தாண்டி நிதியியல், எனர்ஜி, பிக் டெக் பிரிவில் புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப் வீழ்ச்சியால் அதிரும் அமெரிக்கா.. AI உட்பட  4 முக்கிய துறைகளுக்கு செக் வைக்கும் ஜனநாயகக் கட்சி!

நிதியியல் சேவை துறை

டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிதியியல் சேவைத் துறையில் பல்வேறு தளர்வுகள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது மூலம் பெரிய அளவிலான நிதி புழக்கம் உருவாகி தற்போது அமெரிக்காவின் கடன் அளவு, பணவீக்கம் அனைத்தும் உச்சத்தில் உள்ளது.

இப்படியிருக்கையில் ஜனநாயக கட்சி தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் உறுப்பினர்கள் சபையில் ஆதிக்கத்தை அடைந்துள்ள காரணத்தால் பங்குச்சந்தையில் கடுமையான கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் கொண்டு வரும் என எம்கே குளோபல் தெரிவித்துள்ளது.

இதேபோல் கடுமையான மூலதன கட்டுப்பாடு, நிதியியல் சேவைத் துறையில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகளை பெடரல் ரிசர்வ் வாயிலாகக் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது எனக் கணிக்கப்படுகிறது. இதனால் நிதியியல் சேவைத் துறை அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொள்ளும்.

எனர்ஜி துறை

அடுத்தாக எனர்ஜி, ஜனநாயக கட்சி பாரம்பரியமாக கிளின் எனர்ஜியை விரும்பும் கட்சியாக இருக்கும் காரணத்தால், டிரம்ப் அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தில் அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்யும் அல்லது குறைக்கும்.

இதேபோல் இத்துறையின் வளர்ச்சியைக் குறைக்க Emission கட்டுப்பாட்டை வைக்கலாம், இதேபோல் சுற்றுச்சூழல் நிறுவனத்தை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம்.

ஏஐ மற்றும் டேட்டா சென்டர்

ஏஐ, ஏஐ உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி தொடர்ந்து வேகமாக வளர்வதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் டேட்டா சென்டர் அமைப்பதில் மாநில அரசுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும், குறிப்பாக வெப்ப நிலை, நிலத்தடி நீர், சுற்று சூழல் பாதுகாப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் செயற்கை நுண்ணறிவு துறையில் விதிமுறைகள், தரவு பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.

பெரிய டெக் நிறுவனங்கள்

மேலும் டெக் நிறுவனங்கள், ஜனநாய கட்சியின் வருகை மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் விதிமுறைகள், தரவு பாதுகாப்பு, தொழில்நுட்ப நிறுவனங்களின் மோனோபோலி ஆதிக்கத்திற்கு எதிரான ஆன்டி-ட்ரஸ்ட் விசாரணைகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+