அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிக மோசமான தோல்வியை டிரம்ப் சந்தித்துள்ளார். இந்த மிட்டேர்ம் தேர்தல் இன்னும் முழுமையாக வெளியிடாத நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் செனட் சபையில் ஆதிக்கம் பெற தேவையான 50 இடங்களுக்கு 53 இடத்தில் ஜனநாயக கட்சி வென்றுள்ளது.
இதேபோல் டிரம்ப்-ன் ஜனநாயக கட்சி 42 இடத்தை வைத்துக்கொண்டு 7 இடத்தில் முன்னிலையில் உள்ளது. இந்த 7 இடத்தில் வெற்றி அடைந்தாலும் செனட் சபையில் ஆதிக்கம் கிடைக்காது. இதேபோல் உறுப்பினர்கள் சபையில் ஆதிக்கம் செலுத்த 218 இடங்கள் தேவை ஆனால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 224 இடங்களில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது, இதோடு 25 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபையிலும் அதிபரான டிரம்பும், அவருடைய குடியரசு கட்சியும் ஆதிக்கத்தை இழந்துள்ளது. எனவை அரசு அதிகாரம் அனைத்தும் இனி எதிர்க்கட்சியிடம் தான் இருக்கும். டிரம்ப்-ன் தோல்வியும், ஜனநாயக கட்சியின் வெள்ளியும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்..? இனி உலக சந்தையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்..?
கச்சா எண்ணெய் விலை + ஈரான் போர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் காரணத்தை ஈரான் போரில் இருந்து டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தை முழுமையாகப் பின்வாங்கவும், போர் தாக்குதல், போர் ஏற்பாடுகளையும், ஈரான் போருக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உடனடியாக நிறுத்த கோரி மசோதாவை முன்வைக்கும். அவை இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது மூலம் விரைவில் போர் முடிவுக்கு வரும்.
இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 டாலருக்குச் செல்ல துவங்கும். இது பொருளாதாரம், வர்த்தகம், முதலீட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதிபருக்கே உரிய சில அதிகாரம், உரிமைகள் மீது ஜனநாயக கட்சியின் முயற்சிகளைத் தடுக்கவும் வாய்ப்புள்ளது.
வரி விதிப்பு
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த 2 வருடத்தில் அதிகப்படியான வரியை உலக நாடுகள் மீது விதித்தது. இதை ஏற்கனவே ஜனநாயக கட்சி எதிர்த்த நிலையில், தற்போது அதிகாரத்திற்கு வந்த பின்பு வரி விதிப்பைக் குறைக்கலாம், நீக்கலாம் அல்லது புதிய வரி விதிப்பைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.
ஆனால் வரி குறைப்பு என்பது உடனடியாக குறையும் விஷயம் இல்லை என்றாலும், வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் புதிய மாற்றங்கள், தளர்வுகள் உலகளாவிய சந்தையில் எதிர்பார்க்கலாம்.
இதை தாண்டி பல முக்கியமான துறைகள் மிட்டேர்ம் தேர்தல் மூலம் பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications
