ஈரானை பகடைகாயாய் பயன்படுத்தும் டிரம்ப், நெதன்யாகு.. விடித்ததும் வந்த உத்தரவு.. அடித்துபிடித்து ஓடிய ராணுவம்!

அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல், இஸ்ரேலில் சட்டமன்றத் தேர்தல் இரண்டும் அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் காரணத்தால் டிரம்ப்பும், நெதன்யாகுவும் தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஈரனை பகடகாயாய் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

டொனால்டு டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு மக்கள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு குறைந்துள்ள வேளையில், இந்த தேர்தல் வெற்ற பெற வேண்டுமாயின் அந்தந்த நாட்டுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கினால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற திட்டத்தின் கீழ் இந்த தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக உலகளாவிய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானை பகடைகாயாய் பயன்படுத்தும் டிரம்ப், நெதன்யாகு.. விடித்ததும் வந்த உத்தரவு.. அடித்துபிடித்து ஓடிய ராணுவம்!

ஈரான் மீதான தாக்குதலை கடந்த வாரமே துவங்க திட்டமிட்டு இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு டிரம்ப் தொலைபேசியில் அழைத்து தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டது மூலம் தாக்குதலை நிறுத்தினார். ஆனால் நெதன்யாகு, விரைவில் டிரம்ப் அனுமதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தாக்குதல் நடத்தப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ஒரு முக்கியமான உத்தரவு வந்துள்ளதாகவும், இந்த உத்தரவையடுத்து மத்திய கிழக்கில் இருக்கும் அனைத்து அமெரிக்க ராணுவ தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானங்கள், ஆயுதங்கள் என அனைத்தையும் ஈரான் தாக்குதல் எல்லைக்கு வெளியே கொண்டு செல்ல அமெரிக்க ராணுவத்தின் CENTCOM உத்தரவிட்டு உள்ளதாக Drop Site தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் இருக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவமும் தற்போது பாதுகாப்பான இடத்திற்கு செல்வது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்க படைகளும் மாபெரும் தாக்குதலை துவங்க டிரம்ப்-ன் உத்தரவுக்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறது.

இதேவேளையில் இஸ்ரேல் உதவியுடன் அமெரிக்க மீண்டும் தாக்குதலை துவங்க வேண்டும் என CENTCOM அமைப்பின் தலைவர் அட்மிரல் பிராட்லி கூப்பர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் ஆதாரவு தெரிவித்ததன் விளைவாக இன்று காலை அமெரிக்க ராணுவத்தை பாதுகாப்பான இடத்திற்கு ஒருங்கிணைக்க உத்தரவு வெளியாகியுள்ளது.

உதாரணமாக கத்தார் நாட்டில் இருக்கும் அல் உதெய்த் தளத்திலிருந்து அமெரிக்க ராணுவ விமானங்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், இதேபோல் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலங்களில் பணியாற்றும் அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில் இஸ்ரேல் ராணுவம் Nevatim, Ovda, Ramon ஆகிய விமானப்படைத் தளங்களிலிருந்து போர் விமானங்கள் வெஸ்ட்பேங்க் வான்பரப்புக்கு மேலே சென்று அமெரிக்கா ராணுவத்துடன் இணைவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் கடந்த வாரம் ஈரான் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் டிரம்ப் மறுத்தார், ஆனால் தற்போது அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இத்தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்க தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில் அமெரிக்கா - இஸ்ரேல் ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வரும் ஈரான், தன்னுடைய அனைத்து படைகளுக்கும் அமெரிக்கா மற்றும் அவர்களுக்கு ஆதாரவாக இருக்கும் அனைத்து தரப்பினரையும் டார்கெட் ஆக கருத உத்தரவிட்டு உள்ளது.

இதேபோல் அடுத்த போர் என்பது மிகப்பெரியதாக இருக்கும் எனவும் ஈரான் உச்ச தலைவர்கள் மத்தியில் இருந்து உத்தரவும் அறிவுரையும் வந்துள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் FARS தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால், டிரம்ப் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு முன்பு (நவம்பர் 3ஆம் தேதி) ஈரான் மீது தாக்குதல் நடத்த எவ்விதமான திட்டமும் இல்லை என செய்தியாளர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+