நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் அதானி குழுமத்தின் மறு ஏல விண்ணப்பம் சமர்ப்பித்த காரணத்தால், ஏலத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.
இந்த வாயிலாக DHFL கைப்பற்றும் போட்டியில் தற்போது அமெரிக்காவின் முன்னணி தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் முதல் இடத்திலும், பிராமல் குரூப் 2வது இடத்திலும், அதானி குரூப் கடைசி இடத்திலும் உள்ளது.
கடும் போட்டி
டிஹெச்எப்எல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் அமெரிக்காவின் ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட், பிராமல் குரூப், அதானி குழுமத்தின் மத்தியில் கடுமையான போட்டி இருந்தது.
அதானி குழுமம் முதலில் DHFL நிறுவனத்தின் ஒரு பகுதி வர்த்தகத்தை மட்டுமே கைப்பற்ற விருப்பம் தெரிவித்த நிலையில், மொத்த வர்த்தகத்தைக் கைப்பற்ற 30,000 கோடி ரூபாய் வரையில் கொடுத்த தயார் எனப் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த போது, அனைவருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதன் வாயிலாக ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட், பிராமல் குரூப், மீண்டும் விண்ணப்பம் சமர்ப்பித்தது.
ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட்
இதன் படி புதிய விண்ணப்பத்தில் ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட், டிஹெச்எப்எல் நிறுவனத்தின் ப்ரீ கேஷ், வட்டி வருமானம், லைப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தின் விற்பனை ஆகிய அனைத்திற்கும் சேர்ந்து மொத்தம் 36,600 கோடி ரூபாய் தொகையைக் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளது.
இதில் முன்பணமாக 11,500 கோடி ரூபாய் கொடுக்கத் தயார் எனவும் ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் தெரிவித்துள்ளது.
பிராமல் குரூப்
ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து 2வது இடத்தில் இருப்பது பிராமல் குரூப். இந்நிறுவனம் மொத்த நிறுவனம் வர்த்தகம் அனைத்திற்கும் 35,500 கோடி ரூபாய் தொகையைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முன்பணமாக 13,000 கோடி ரூபாய் கொடுக்கத் தயார் எனவும் பிராமல் குரூப் தெரிவித்தது.
அதானி குழுமம்
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் முதலில் DHFL நிறுவனத்தின் wholesale மற்றும் Slum Rehabilitation Authority (SRA) வர்த்தகத்தை மட்டுமே கைப்பற்ற விண்ணப்பம் செய்தது.
ஆனால் திடீரென மொத்த வர்த்தகத்தையும் கைப்பற்ற 30,000 கோடி ரூபாய் கொடுக்கத் தயார் என அறிவித்த காரணத்தால் ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் மற்றும் பிராமல் குரூப் மறு வாய்ப்பை பெற்றது.
அதானி குழுமம் 30,000 கோடி ரூபாயை தொகையை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட்டு உள்ள காரணத்தால் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications