அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கி இன்றுடன் இரண்டு வாரம் முடிந்திருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் 15வது நாளாக நீடிக்கிறது. இந்த 15 நாட்கள் போர் ஈரான் மட்டுமல்ல உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
குறிப்பாக கச்சா எண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்களுக்கு வெளிநாடுகளை சார்ந்துள்ள இந்தியா போன்ற நாடுகள் தான் இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஈரான் போர் முடிவுக்கு வந்து விடாதா வழக்கம் போல வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் , எல்பிஜி உள்ளிட்டவை தங்களுடைய நாடுகளுக்கு வந்து பிரச்சனை தீர்ந்து விடாதா என ஆசிய நாடுகள் ஒவ்வொரு நொடியையும் தீவிரமாக கவனித்து வருகின்றன.

ஆனால் ஈரானில் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் தற்போதைக்கு தெரியவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலும் சற்று அமைதியானால் ஈரான் கொந்தளிக்கிறது ஈரான் சற்று அமைதியானால் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை தீவிரப்படுத்துகின்றன. 15 நாட்களாக நிலைமை இப்படியே நீடிக்கிறது. இந்த சூழலில் ஈரான் போரை இன்னும் தீவிரமடைய செய்யும் வகையில் அமெரிக்கா ஒரு செயலை செய்திருக்கிறது.
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை கையாளுகிறது கார்க் தீவு. இது ஈரானின் மகுடம் என அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டிரம்ப், மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த குண்டு வீச்சு தாக்குதல்களில் ஒன்றை அமெரிக்காவின் சென்ட்ரல் கமெண்ட் நடத்தி இருக்கிறது என கூறியுள்ளார்.

ஈரானின் மகுடமாக திகழக்கூடிய கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் முற்றிலுமாக அழித்துள்ளது என தெரிவித்திருக்கிறார். தற்போதைக்கு இந்த தீவில் இருக்கக்கூடிய ராணுவ கட்டமைப்புகள் மீதுதான் அமெரிக்கா கை வைத்து இருக்கிறது எண்ணெய் உள் கட்டமைப்புகளை இன்னும் நாங்கள் தொடவில்லை, ஆனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தால் எண்ணெய் கட்டமைப்புகளையும் அழிப்போம் என எச்சரித்துள்ளார்.
மேலும் ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிடுத்து சரணடைந்தால் , மிச்சம் மீது இருப்பதையாவது காப்பாற்றி கொள்ளலாம் என டிரம்ப் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் சக்திவாய்ந்த பல ஆயுதங்களை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்றும் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை கார்க் தீவு தான் கையாள்கிறது. இந்த தீவின் எண்ணெய் கட்டமைப்புகள் பாதிக்கப்படும்போது ஒட்டுமொத்தமாகவே கச்சா எண்ணெய் விநியோகத்திலேயே பெரிய தடையை ஏற்படுத்தும். இது நீண்ட கால பிரச்சினையை உண்டாக்கும்.
இந்த சூழலில் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கை வைத்தால் அமெரிக்காவின் எண்ணெய் கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்திருப்பதாக கூறும் ஈரான் இதில் 200 பேர் குழந்தைகள் 200 பேர் பெண்கள் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications