ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிட தயாராக உள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி சொன்னதாக வெளியான தகவல் போர் பதற்றத்தை குறைத்துள்ளது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதேவேளையில் அமெரிக்கா, ஈரான் மீதான போரை டிரம்ப் சொன்ன 4-5 வாரம் காலகட்டத்தை தாண்டி நடத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒரு விஷயம் மீண்டும் முதலீட்டு சந்தையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.

ஈரான் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி ரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிட தயாராக உள்ளதாக கூறினாலும், இதற்கு அமெரிக்கா
திருப்திகரமான மாற்று திட்டத்தை அளித்தால், இந்த முடிவை எடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது.
ஈரான் விளக்கம்
ஈரான் அரசு செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட அறிக்கையில், உண்மையில் இந்த கருத்து, அமெரிக்காவுடன் முன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது நடந்தது என்றும், இந்த பேச்சுவார்த்தையை ஒமான் தலைமையில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போர் துவங்குவதற்கு முன்பு நடந்து என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு உலக அளவில் பதற்றத்தை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதேவேளையில் போலிடிகோ வெளியிட்ட அறிக்கை கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நீடிக்கும்
கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதல்களை தொடங்கின. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த போர் நடவடிக்கை 4-5 வாரங்கள் நீடிக்கும் என்று அறிவித்தார். இதற்கு ஏற்றார் போல் இத்தாக்குதலில் ஈரான் நாட்டின் பல முக்கியமான தலைவர்கள் இறந்தனர்.
ஆனால் தற்போது, அமெரிக்க அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை பார்க்கும் இஸ்ரேல் - அமெரிக்காவின் போர் காலம் நீடிக்கலாம் என்று தெரிகிறது.
வெளியான ரகசியம்
ஐரோப்பிய பத்திரிக்கையான போலிடிகோ வெளியிட்ட தகவலின் படி, அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ஈரான் மீதான நடவடிக்கைகளுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு ராணுவ உளவுத்துறை அதிகாரிகளை கூடுதலாக அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளது. இதனால் ஈரான் மீதான தாக்குதல் செப்டம்பர் வரை நீடிக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
போர் நீடித்தால் என்ன நடக்கும்?
போலிடிகோ அறிக்கை கூறுவது போல், போர் அமெரிக்கா அரசின் 4-5 வார கால அட்டவணையை தாண்டி நீடித்தால், உலக பொருளாதாரம் பெரும் அழுத்தத்தை சந்திக்கும். அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் ஃப்ளோரிடாவில் தனது தலைமையகத்தில் கூடுதல் ராணுவ உளவுத்துறை அதிகாரிகளைப பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது என பென்டகன் நோட்டிபிகேஷ் மூலம் பொலிடிகோ தெரிவித்துள்ளது. இது ஈரான் மீதான போர் தீவிரமடையும் என்பதை காட்டுகிறது.
உலக நாடுகள் அச்சம்
ஏற்கனவே ஹார்மூஸ் நீர்வழி பாதை முடங்கியிருக்கும் காரணத்தால் ஜப்பான், தென் கொரியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இப்போர் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ந்தால் முதலீட்டாளர்களும், மக்களும் பெரும் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications