ரஷ்யா உக்ரைன் போரானது ஒரு வருடமாக தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், இன்னும் முடிவுக்கு வந்த பாடாக இல்லை. இது தலைப்பு செய்திகளில் இருந்து கவனம் குறைந்தாலும், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையானது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சொல்லப்போனால் ரஷ்யா இன்னும் கடுமையான தாக்குதலை உக்ரைன் மீது செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் இருந்தே உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் ஏற்றுமதிக்கு முற்றுக் கட்டை போடும் விதமாக, தடை போடுவது குறித்து திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளை பொறுத்த வரையில் நிதி ரீதியாக ரஷ்யா வீழ்ச்சி கண்டால் போரில் இருந்து பின் வாங்கலாம் என யூகித்தன.
பொருளாதாரத்தினை சிதைக்க திட்டம்
ஆனால் மேற்கத்திய நாடுகள் ஒரு வழியை அடைத்தால், மறுவழியாக ரஷ்யா வெளியே வந்தது. ஆக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை சிதைக்க வைக்கலாம் என்ற கனவு என்பது வெறும் கனவாகவே போனது. இதற்கிடையில் ரஷ்யா புதிய புதிய அவதாரங்களில் வணிகத்தினை மேன்மைப்படுத்தி வருகின்றது. கச்சா எண்ணெய் வாங்குவதை பல நாடுகளும் தவிர்த்தாலும், இந்தியா சீனாவுக்கு தள்ளுபடி விலையில் கொடுத்து தன்னுடைய பிரச்சனையை சரி செய்து கொண்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த திட்டம்
ஆக ஒவ்வொரு பிரச்சனையையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ள ரஷ்யா, தொடர்ந்து இன்று வரையிலும் போரில் இருந்து பின் வாங்கவில்லை. தொடர்ந்து உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில் தான் விளாடிமிர் புடினுக்கு மேற்கோண்டு சிக்கலை கொடுக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய தடை திட்டத்தை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. இது பல முக்கிய துறைகளை குறி வைத்து எடுத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
முக்கிய துறைகள் தான் இலக்கு
குறிப்பாக அமெரிக்காவின் இந்த தடை திட்டம், ரஷ்யாவின் பாதுகாப்பு துறை மற்றும் எனர்ஜி துறையிலும் இருப்பதாக கூறப்படுகின்றது. இது தவிர நிதி நிறுவனங்கள், பல தனி நபர்கள் மீதும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதில் அமெரிக்காவோ, ரஷ்யாவோ தங்களது கருத்துகளை இதுவரையில் வெளியிடவில்லை.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை?
இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை பாதிக்க வைக்க முடியும் என அமெரிக்கா நம்புவதாகவும் தெரிகிறது. இது குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாகவும் என கூறப்படுகிறது.
விரைவில் அறிவிக்கலாம்
குறிப்பாக இந்த முயற்சிகளின் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தினை சார்ந்த வங்கிகள், ரஷ்ய சொத்துகள் மீது அழுத்தம் கொடுக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என தெரிகின்றது. எனினும் இதற்கு ஒட்டுமொத்த உறுப்பு நாடுகளின் ஆதரவும் தேவைப்படுகிறது. ஆக இது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம்.
ஈரானிய நிறுவனங்களுக்கு தடையா?
ஐரோப்பிய நாடுகளின் தடை பட்டியலில் ரஷ்யாவுக்கு ட்ரோன்களை சப்ளை செய்யும் ஈரானிய நிறுவனங்கள் மீதும் தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இது மட்டும் அல்ல ஐடி மற்றும் உதிரி பாகங்கள், கனரக வாகனங்கள், மின் சாதனங்கள் மற்றும் பல அரிய வகை பொருட்கள் மீதும் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனை ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முடக்க திட்டம்
மொத்தத்தில் ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் மீது அழுத்தத்தினை அதிகரிப்பது, அவற்றின் மீது வணிக தடையை அதிகரிப்பது என பல திட்டங்கள் கைவசம் உள்ளனவாம். இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை முடக்க திட்டமிடுவதாகவும் தெரிகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
எனினும் பாதுகாப்பு துறை, எனர்ஜி துறை எனும்போது அதில் தடைகளை விதித்தால், அதிகளவில் ரஷ்யாவினை பாதுகாப்பு மற்றும் எரிபொருளுக்காக சார்ந்திருப்பது இந்தியாவும் தான். ஆக இந்தியாவுக்கும் இது தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications