அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக இருக்கும் வேளையில், யார் அடுத்த ஆட்சியை பிடிப்பது என்பதில் பெரும் போட்டி உருவாகியுள்ளது. ஒருபக்கம் டொனால்டு டிரம்ப் ஆளும் கட்சியான டெமாக்ரட்டிக், ஜோ பைடந், கமலா ஹாரீஸ் ஆகியோர் தனது பிரச்சாரத்தில் வறுத்தெடுத்து வருகிறார்.
மறுமுனையில் தனது அரசியல் பிரச்சாரத்தின் மூலம் பெரும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் ஈட்டி வருகிறார். ஆயிரம் இருந்தாலும் டொனால்டு டிரம்ப் முதலில் ஒரு பிஸ்னஸ்மேன் தான், அதற்குப் பின்பு தான் அரசியல் எல்லாம். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை புதிதாக ஒரு பிஸ்னஸ் துவக்கியுள்ளார்.

டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக மூன்றாவது முறையாகப் பிரச்சாரம் செய்து வருகிறார், இந்த பிரச்சாரத்தின் போது பைபிள்கள், ஸ்னீக்கர்கள், புகைப்பட புத்தகங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றை விற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை ஒரு புதிய பிஸ்னஸ்-ஐ துவங்கியுள்ளார், இந்த புதிய வர்த்தக முயற்சியில் வைரம் பதிக்கப்பட்ட வாட்சுகளை விற்பனை செய்ய உள்ளார்.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்களிடம் தனது பெயரில் அல்லது பிராண்டு தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டும் பணிகளை 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் செய்து வருகிறார்.
மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் இந்த வருடம் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியதில் இருந்து பைபிள், ஸ்னீக்கர் ஷூ, அரிய புகைப்பட அடங்கிய புத்தகங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றை விற்றுள்ளார். இப்போது, வைரம் பதிக்கப்பட்ட வாட்சுகளை விற்பனை செய்யும் திட்டத்தில் இறக்கியுள்ளார்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் வியாழக்கிழமை "அதிகாரப்பூர்வ டிரம்ப் வாட்ச் கலெக்ஷன்" விற்பனைக்காக வெளியிட்டார். இந்த விலையுயர்ந்த வாட்ச்-ன் வெளிவட்டத்தில் 122 வைரங்கள் பதிக்கப்பட்டு, 18-காரட் தங்கத்தில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஸ்பெஷல் எடிஷன் டிரம்ப் வாட்ச் விலை 100,000 அமெரிக்க டாலராகும். இதோடு டிரம்ப் அதிகப்படியான மக்களை கவர "ஃபைட் ஃபைட் ஃபைட்" என்ற மலிவு விலை மாடல் வாட்ச் அறிமுகம் செய்துள்ளார், இதன் விலை 499 டாலராகும்.
டொனால்டு டிரம்ப் தனது அரசியல் மற்றும் வணிக திறன்களை இணைக்கும் வகையில் 2024 தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்து, பல பொருட்களை விற்பனை செய்து நிதி திரட்டி வருகிறார். இது இந்த முறை மட்டுமல்ல, இதற்கு முந்தைய 2 அரசியல் பிரச்சாரத்தின் போதும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது துவங்கியுள்ள வாட்ச் விற்பனை தேர்தல் நடக்கும் நாளுக்கு முன்பு வரையில் அடுத்த 40 நாட்களுக்கு நடக்கும் எனக் கூறப்படுகிறது. இதேவேளையில் அமெரிக்க மக்கள் மத்தியில் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பணமாக்குவது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அமெரிக்கர்களின் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கையில் எவ்விதமான முன்னேற்றத்தையும் காட்டவில்லை என டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் வேளையில் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் டார்கெட் செய்து நிதியை திரட்டி வருகிறார்.
ஆனால் இந்த பொருட்களை விற்பனை செய்யும் இணையத்தளத்தில் சில முக்கிய விபரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் இந்த பொருட்களை விற்பனை செய்யப்படுவதிலிருந்து கிடைக்கும் வருமானம் டிரம்புக்கோ அல்லது அவரது பிரச்சாரத்திற்கோ நேரடியாகப் பலன் அளிக்காது, இது "paid license agreement" மூலம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வார தொடக்கத்தில், அவர் டிரம்ப் முகம் கொண்ட 100 டாலர் மதிப்பிலான வெள்ளி நாணயங்களை விற்பனை செய்வதாக அறிவித்தார். மார்ச் மாதம், ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக,"God Bless the USA Bible" என்ற தலைப்பில் 59.99 டாலருக்கு பைபிள் விற்பனை செய்தார். இதேபோல் இதற்கு முன்பு தண்ணீர், வோட்கா மதுபானம், மாட்டு கறி ஆகியவற்றையும் விற்பனை செய்துள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

இது ரொம்ப கேவலம்! ஈரானை வெளுத்து வாங்கிய டிரம்ப்..போர் நிறுத்த ஒப்பந்தத்தில் துரோகம்?

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

Fact check:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா டிரம்ப்? #Trump Dead ஹேஷ்டேக் உருவானது எப்படி?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications