பிரதமர் மோடி – டொனால்டு டிரம்பு வெறும் சந்திப்பு தான்.. வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டி டிரம்ப் தனது இரண்டு நாள் பயணமாக அடுத்து வரவிருக்கும் 24ம் தேதியன்று இந்தியா வரவிருக்கிறார்.

 

இங்கு பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் சந்தித்து பேசவிருக்கின்றனர்.

இந்த சந்திப்பில் அமெரிக்க - இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியெல்லாம் எதுவும் நடக்க போவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

ஒப்பந்தம் குறித்தான இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை

ஒப்பந்தம் குறித்தான இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை

ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்த, இந்தியாவின் வெளியுறவுதுறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்காவும் இந்தியாவும் கடைசி மைல் பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. எனினும் இந்த ஒப்பந்தம் இந்த இந்திய வருகையின் போது போடப்படுவது கஷ்டம் தான் என்று தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் சந்தேகம் தான்

ஒப்பந்தம் சந்தேகம் தான்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், நாங்கள் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை வைத்திருக்க முடியும். ஆனால் நான் மிகப்பெரிய அந்த வர்த்தக ஒப்பந்தத்தை உண்மையிலேயே சேமித்து வைத்திருக்கிறேன். மேலும் நாங்கள் இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை செய்யவிருக்கிறோம். ஆனால் அது தேர்தலுகு முன்பே இருக்குமா என்று தெரியவில்லை என்று டிரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

உற்சாகமான பயணம்
 

உற்சாகமான பயணம்

மேலும் நாங்கள் இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை. ஆனால் நான் பிரதமர் மோடியைய் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் விமான நிலையத்திற்கும் நிகழ்வுக்கும் இடையில் ஏழு மில்லியன் மக்கள் உள்ளதாக கூறியுள்ளார். எனவே இது மிக உற்சாகமாக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு கட்டண மன்னர்

இந்தியா ஒரு கட்டண மன்னர்

இந்தியாவை அடிக்கடி கட்டண மன்னர் அழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகை தருவதும், அவரை பிரதமர் மோடி அவரை சொந்த ஊரான குஜராத்தில் உள்ள அகமாதாபாத்தில் வரவேற்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருதரப்பு பேச்சு வார்த்தைகள் இறுதி நிலையை எட்டப்படாத நிலையில், அமெரிக்காவின் வர்த்தக பிரதி நிதி கடந்த வாரமே தனது இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சலுகைகள்

சலுகைகள்

அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கான கட்டண சலுகை, குறிப்பாக பால் பொருட்கள், உலர் தானியங்கள் வரை அனைத்துக்கும் இந்தியா சிறந்த சந்தை அணுகலை வழங்கியுள்ளது. மேலும் ஹார்லி டேவிட்சன் சைக்கிள்களுக்கு வரி விகிதங்களை குறைக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இந்த ஹார்லி டேவிட்சன் சைக்கிள்களை அடிக்கடி டிரம்ப் மேற்கோள் காட்டி வந்ததும் குறிப்பிடத்ததக்கது.

ஏமாற்றமளிப்பதாக உள்ளது

ஏமாற்றமளிப்பதாக உள்ளது

இதன மூலமாக இந்திய இழந்த ஜிஎஸ்பி சலுகைகளை மீட்டெடுக்க முடியும் என்றும் நம்பி வருகிறது. ஆக டிரம்பின் இந்த வருகையின் போது இதுபற்றிய பேச்சு வார்த்தகள் இருக்கலாம் என்று நம்பப்பட்ட நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை என கூறப்படுவது மிக ஏமாற்றமளிப்பதாக இருப்பதாக நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Us President Donald Trump really likes PM modi but trade deal Indian for later

American president Donald Trump said reporters that he still wanted to do a very big trade deal with India, but added I don’t know if it will be done before the election. Also he said we’re not treated very well by India, but I happen to like Prime Minister Modi a lot.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X