அட ரூ.100 கோடி செலவ விடுங்கப்பா.. டிரம்ப் தங்கும் ஹோட்டலின் ஒரு நாள் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது இரண்டு நாள் பயணமாக இன்னும் சற்று நேரத்தில் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். உலகின் மிக வலிமை மிக்க மனிதர்களில் ஒருவராக கருதப்படும் டிரம்பின் வருகைக்காக அகமதாபாத் நகரமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது.

 

இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 100 கோடி ரூபாய் செலவில் டிரம்பை வரவேற்க செலவிடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு மூலமே செலவிடப்படுவதாகவும், இந்த குழுவில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று வெளியிடப்படவில்லை.

இந்தியா வருகை

இந்தியா வருகை

அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி ராபர் இந்தியா வருகையை ரத்து செய்துள்ள நிலையில், இருதரப்பிலும் தீர்வு காணப்படாமல் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு உள்ளதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையிலேயே பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவிருக்கும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, டிரம்பின் மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பல அதிகாரிகள் வருகின்றனர்.

எவ்வளவு செலவு?

எவ்வளவு செலவு?

இவர்களை வரவேற்க பல கோடி ரூபாய் செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுமார் 100 கோடி ரூபாய் செலவு இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா வரவிருக்கும் டிரம்ப் ஐடிசி மவுரியா ஹோட்டலில் தங்க இருக்கிறாராம். சாணக்கியா சூட் என்று கூறப்படும் இந்த சொகுசு தளம் 4,600 சதுர அடி பரப்பளவில் உள்ளதாகவும், இதற்கு ஓர் இரவுக்கு தங்க 8 லட்சம் ரூபாய் கட்டணம் என்று பிசினஸ் டுடேவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு யாரெல்லாம் தங்கினார்கள்?
 

இதற்கு முன்பு யாரெல்லாம் தங்கினார்கள்?

டிரம்ப் தங்கவிருக்கும் இந்த ஹோட்டலில் இதற்கு முன்பு பில் கிளிண்டன், ஜார்ஜ் டபள்யூ புஷ் மற்றும் பராக் ஒபாமா உள்ளிட்டோர் அடங்கும். இவர்கள் தவிர தலாய் லாமா, டோனி பிளேர், விளாடிமிர் புடின், மன்னர் அப்துல்லா, புருனே சுல்தான் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், அதிபர்களும் தங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

என்னென்ன உணவு வகைகள்

என்னென்ன உணவு வகைகள்

இதுதவிர சிறப்பான வரவேற்பு, உணவுகளும் இதில் அடங்குமாம். அதிலும் குறிப்பாக பராக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோரும் ஜனாதிபதி காலத்தில் வழங்கப்பட்ட உணவுகளும் இந்த சமயத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, மேலும் டிரம்பிற்கு மிக பிடித்தமான டயட் கோக் மற்றும் செர்ரி வெண்ணிலா ஐஸ்க்ரீம் ஆகியவையும் ஐடிசியில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளனவாம். மேலும் இந்த அமெரிக்க தம்பதிகளுக்கு தேவையான உணவினை சமைக்க அவர்களது சொந்த சமையல்காரரும் உள்ளாராம். அவர்களின் விருப்பதிற்கு ஏற்ப சமைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல வசதிகள் கொண்ட ஆடம்பர சொகுசு அறை

பல வசதிகள் கொண்ட ஆடம்பர சொகுசு அறை

இந்த ஆடம்பரமான ஹோட்டலில் அமெரிக்கா ஜனாதிபதியின் அறை 14 வது மாடியில் உள்ளதாம். இந்த அறை பட்டுக்களால் ஆன பேனல் சுவர்களும், இருண்ட மர தளமும், பல கலைப்படைப்புகளும் உள்ள அறையாம். இதில் மினி ஸ்பா, ஜிம்னாசியம், தனியான லிவ்விங் ரூம், 12 பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கு பெரிய அளவிலான டைனிங் ஹால் என பல வசதிகளை கொண்ட அறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Us president Trump to stay at ITC maurya’s chanakya suite, you that how much its costs a night

ITC maurya’s suite spans 4,600 square feet and costs around Rs8,00,000 per night. It’s in 14th floor of the luxurious property. Chanakya suite has a silk panelled walls, dark wood flooring and artwork, living room, 12-seater dining room, the suit also has a huge bathroom with pearl accessories and a mini-spa and gymnasium.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X