டெல்லி: 2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகும். குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் வர்த்தகங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இந்தியா போன்ற அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த தேர்தல் முடிவுகள் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்தியா அதிக அளவிலான சரக்கினை ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.

2023-24 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 42.2 பில்லியன் டாலர்கள் .அதே போல இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மதிப்பு 77.52 பில்லியன் டாலர்கள்.
எனவே அமெரிக்க தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்த ஏற்றுமதி இறக்குமதியில் தாக்கம் ஏற்படும். இந்தியாவிலிருந்து பெரும்பாலும் மின்னணு சாதன பொருட்களே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2023- 24 ஆம் நிதியாண்டில் 11,081 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்ததாக இந்த பட்டியலில் இருப்பது நகைகள் மற்றும் ரத்தினங்கள் 9,949 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ரத்தினங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது மருந்து பொருட்கள். இந்தியாவிலிருந்து ஓராண்டில் 8,081 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே எந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுகிறாரோ அதை பொறுத்து இந்த ஏற்றுமதி இறக்குமதியில் மாற்றம் ஏற்படும்.
குறிப்பாக வரி விகிதங்கள் மாற்றத்துக்கு ஆளாகும் என சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் குறிப்பிட்ட சில பொருட்களை அமெரிக்கா எந்த ஒரு இறக்குமதி வரியும் இல்லாமல் இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்கிறது. இதில் மருந்து உள்ளிட்டவை அடங்கும்.
ஆனால் துணிமணி மற்றும் ஆடை சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 32 சதவீதம் வரை வரிவிதிக்கப்படுகிறது. கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபராக தேர்வாகும் போது இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் இருக்காது . அப்படி மாற்றம் இருந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஆனால் ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் மருத்துவ பொருட்கள் மீது இறக்குமதி வரியை விதிக்க மாட்டார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர் .
அதேபோல மின்னணு சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அரசு வரி விதிக்க வாய்ப்புள்ளது. எந்த நபர் அதிபராக தேர்வானாலும் மத்திய அரசு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை தக்க வைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் கையில் எடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications