டொனால்டு டிரம்ப்-ஐ அடித்து துவைத்த ஜிம் ரோஜர்ஸ்.. என்ன நினைச்சுக்கிட்டு இருகீங்க..?

குவான்டம் பண்ட், சோரஸ் பண்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றை உருவாக்கி உலகளவில் புகழ்பெற்ற நிதி ஆலோசகரான ஜிம் ரோஜர்ஸ், அமெரிக்கா விரைவில் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து ரெசிஷனை எதிர்கொள்ளும் என்று உறுதியாகத் தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை விதித்த பின்பு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தின் வர்த்தகக் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்த ஜிம் ரோஜர்ஸ், இந்த ரெசிப்ரோக்கல் வரி கொள்கைகள் சர்வதேச வர்த்தக போரைத் தீவிரப்படுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டொனால்டு டிரம்ப்-ஐ அடித்து துவைத்த ஜிம் ரோஜர்ஸ்.. என்ன நினைச்சுக்கிட்டு இருகீங்க..?

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 'விடுதலை தினம்' என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்கள் மீதும் 10 சதவீத வரியும், 60 நாடுகள் மீது கூடுதல் வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. இதோடு சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 34% மற்றும் 27 சதவீதம் என்ற அதிகப்படியான அதிக விகிதங்கள் விதிக்கப்படுகின்றன.

இந்த ரெசிப்ரோக்கல் வரி குறித்து ஜிம் ரோஜர்ஸ் கூறுகையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறிப்பிடத்தக்கப் பொருளாதார சவால் இல்லாமல் நீண்ட காலம் அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வந்தது. ஆனால் அமெரிக்கா பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சனை இந்த வரி மூலம் பூதாகரமாக வெடிக்கச் செய்துள்ளார் டிரம்ப். இதனால் வரவிருக்கும் ரெசிஷன் யாராலும் தவிர்க்க முடியாதது என்று ரோஜர்ஸ் உறுதியாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளும் சிக்கல்களை டிரம்ப் விதித்துள்ள வரி மூலம் கூடுதலாகச் சிக்கலாகின்றன என்று ஜிம் ரோஜர்ஸ் கூறியுள்ளார். மேலும் டிரம்ப்-க்கு இந்த வரி விதிப்பு மூலம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.

வர்த்தக போர் மோசமானது, இது உலக நாடுகளுக்கும் நல்லது இல்லை என்பதை நான் நம்புகிறேன். ஆனால் இந்த வரி மூலம் உருவாகியுள்ள வர்த்தக போரில் டிர்ம்ப் வெற்றி பெறுவார் என அவர் நினைக்கிறார், ஆனால் அது நடக்காது என ஜிம் ரோஜர்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சரி அமெரிக்கா வரி விதித்து விட்டது, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலக நாடுகளும் பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதித்தால் என்ன நடக்கும். தற்போது கனடா வரியை விதிக்க துவங்கியுள்ளது, இந்த போக்கு உலகின் முக்கிய பொருளாதார நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கா-வின் வரி விதிப்பை எந்தொரு நாடும் அமைதியாக வேடிக்கை பார்க்காது, இதனால் ஒவ்வொரு நாடும் பதிலடி கொடுத்து வரியைத் தனது பங்கிற்கு உயர்த்தினால் பணவீக்கம் அதிகரித்து, உற்பத்தி குறைந்து, வேலைவாய்ப்புகள் இழந்து பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+