அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவை குறிவைத்து குற்றம் சாட்டி பேசி வருகிறார். 2025 பிப்ரவரி 13ம் தேதியன்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், அமெரிக்காவுக்கு இந்தியாவுடான வர்த்தகத்தில் 10,000 கோடி டாலர் வர்த்தக பற்றாக்குறை கொண்டு இருக்கிறது, வர்த்தகத்தில் இந்தியா நியாயமற்ற முறையில பயன் அடைகிறது என்று கூறினார். ஆனால் உண்மையான தொகை அதில் பாதிக்கும் குறைவானது.
ஏற்றுமதி
2024-25ம் நிதியாண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு 8,650 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம் அங்கிருந்து 4,530 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவுடான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 4,100 கோடி டாலர்தான் உபரி ஏற்பட்டது. இதிலிருந்தே டிரம்ப் பேசுவது பச்ச பொய் என்பது தெரிந்து கொள்ளலாம்.

இந்த சூழ்நிலையில், வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை குறிவைப்பது தவறானது. உண்மையில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து அதிகளவில் சம்பாதிக்கிறது. அமெரிக்கா இந்தியாவிலிருந்து வெளிப்படையான வழியில் இல்லாமல் வேறுவிதமாக அதிக பணத்தை திரட்டுகிறது.
வர்த்தக உபரி
உயர்கல்வி, தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் ஆயுத விற்பனை என பலவழிகளில் அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 8,500 கோடி டாலர் வரை கமுக்கமாக சம்பாத்தி வருகிறது. இதனை கணக்கில் கொண்டால் அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் வர்த்தக உபரிதான் இருக்கும் என்ற உண்மையை சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி ((ஜிடிஆர்ஐ) அறிக்கை போட்டுடைத்துள்து.
உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (ஜிடிஆர்ஐ)படி, கல்வி, டிஜிட்டல் சேவைகள், ஆலோசனை, அறிவுசார் சொத்து மற்றும் ஆயுதங்கள் விற்பனை ஆகியவை அமெரிக்காவின் வருவாய் காரணியாக கருதப்பட்டால், அது இந்தியாவுடன் 3,500 முதல் 4,000 கோடி டாலர் வரை நிகர உபரியை கொண்டு இருக்கும்.
இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் செலவிடும் தொகை 2,500 கோடி டாலருக்கும் அதிகமாக உள்ளது. இந்திய மாணவர்களால் யுஎஸ்சி மற்றும் என்ஒய்யு போன்ற டாப் பல்கலைக்கழகங்கள் மிகப் பெரிய பலன் அடைகின்றனர். சராசரி இந்திய மாணவர் ஆண்டுக்கு 87,000 முதல் 1,42,000 டாலர் வரை செலவிடுகிறார்.
தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், மெட்டா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை விளம்பரங்கள், கிளவுட் சேவைகள், சாதனங்கள், சாப்ட்வேர் மற்றும் சந்தாக்கள் மூலம் இந்தியாவிலிருந்து 1,500 முதல் 2,000 கோடி டாலர் சம்பாதிக்கின்றனர். இந்த வருமானத்தில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு வரையறுக்கப்பட்ட வரி விதிப்புடன் அமெரிக்காவுக்கு செல்கிறது.
நிதி நிறுவனங்கள்
ஜேபி மோர்கன், சிட்டி பேங்க் மற்றும் மெக்கின்சி போன்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலமும் ஒப்பந்தங்களை நிர்வகிப்பதன் மூலமும் 1,000 முதல் 1,500 கோடி டாலர்களை சம்பாதிக்கின்றன. அதேவேளையில், டெல், ஐபிஎம் மற்றும் வெல்ஸ் பார்கோ போன்ற நிறுவனங்களால் நடத்தப்படும் உலகளாவிய திறன் மையங்களால் நடத்தப்படும் பேக் என்ட் செயல்பாடுகள் 1,500 முதல் 2,000 கோடி டாலர் வருவாய் ஈட்டுகின்றன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டவை.
ஃபைசர் மற்றும் மெர்க் போன்ற மருந்து நிறுவனங்கள் காப்புரிமைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மூலம் ஆண்டுதோறும் 2,000 கோடி டாலர் வரை வசூலிக்கின்றன. அதேநேரத்தில் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் வழங்குபவர்கள் உரிமம் மற்றும் சேவைகள் மூலம் தங்கள் பங்குக்கு இந்தியாவிலிருந்து 120 கோடி டாலர் வருவாய் பார்க்கின்றனர்.
நெட்ஃபிக்ஸ்
அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கு இந்திய சந்தை அட்சய பாத்திரமாக உள்ளது. ஹாலிவுட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸ் விற்பனை மற்றும் ஸ்ட்ரீமிங் சந்தா மூலம் 150 கோடி டாலரை சம்பாதிக்கின்றன.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications