அமெரிக்க சந்தைகள் உயர்மட்ட கட்டுப்பாட்டாளர் அமைப்பான கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் (CFTC), திங்கட்கிழமை கிரிப்டோகரன்சி நிறுவனமான பைனான்ஸ் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான சாங்பெங் ஜாவோ ஆகியோர் மீது "சட்டவிரோதமான" பரிமாற்றம் மற்றும் "போலி" இணக்கத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியது
CFTC அமைப்பு Binance, Zhao மற்றும் அதன் முன்னாள் உயர் இணக்க நிர்வாகி மீது அமெரிக்க சட்டத்தை மதிக்காமல் ஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடுத்துள்ளது.
கிரிப்டோ சந்தை
இந்தியாவில் கிரிப்டோ சந்தை அதிகப்படியான கட்டுப்பாடுகள், அதிக வரி ஆகியவற்றின் மூலம் இப்பிரிவு வர்த்தகத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தி, குறைந்துள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் இன்னும் கிரிப்டோ முதலீடுகள் பெரிய அளவில் நடந்து வரும் வேளையில் FTX வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பினான்ஸ்
இந்த நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமான பினான்ஸ் மீது அமெரிக்க சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் இரு முக்கிய குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்துள்ளது. Binance நிறுவனர் மற்றும் சிஇஓ-வான சாங்பெங் ஜாவோ கிரிப்டோ உலகின் மிகப்பெரிய பணக்காரர் என கருதப்படுகிறார்.
64 பில்லியன் டாலர்
பினான்ஸ் ஆன் செயின் பேலென்ஸ் சுமார் 64 பில்லியன் டாலராகும். பினான்ஸ் நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் டெதர், பிட்காயின், எதிரியம், பினான்ஸ் USD, BNB காயின் ஆகியவை மட்டும் 81 சதவீதத்தை கொண்டவை.
பினான்ஸ் மீதான வழக்கை தொடர்ந்து இத்தளத்தில் இருந்த முதலீடுகள் வெளியேறி வருகிறது.
கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன்
CFTC இன் தலைவர் ரோஸ்டின் பெஹ்னம், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்ற தளமான Binance மீதான குற்றச்சாட்டுகள், "அதீத தடுமாற்றம் மற்றும் ஆபத்தான டிஜிட்டல் சொத்து சந்தையில் தவறான நடத்தைகளைக் கண்டறிந்து நிறுத்துவதற்கான" அரசின் முயற்சிகளில் ஒரு பகுதி என கூறினார்.
Changpeng Zhao
சீனாவில் பிறந்து 12 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்த கோடீஸ்வரரான ஜாவோ, CFTC இன் புகாரை "எதிர்பாராதது மற்றும் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறினார். முதற்கட்ட மதிப்பாய்வில், புகாரில் முழுமையற்ற உண்மைகள் இருப்பதாகவும், இப்புகாரை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம் என்றும் Changpeng Zhao வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
FTX நிறுவனம்
டிசம்பரில் பஹாமாஸில் கைது செய்யப்பட்டு, இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அமெரிக்க குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் கிரிப்டோ தளமான FTX இன் நிறுவனர், சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் மற்றும் அவருடன் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் அனைவரும் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications